திருச்சி:பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து பலி.அரசே குழந்தைகளை பராமரிக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ராஜா .

பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து பலி
அரசு மருத்துவமனையில் காப்பகம் அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை.
திருச்சி திருவானைக்காவல் மாம்பழச் சாலையில் அரசு நிதி உதவியுடன் பச்சிளம் குழந்தைகள் காப்பகம் ஒன்று நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த குழந்தைகள் காப்பகத்தில் திருச்சி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளும், பிறந்தவுடன் தூக்கி வீசப்பட்டு மீட்கப்பட்ட 4 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த குழந்தைகளை பராமரிப்பதில் கவனக்குறைவு ஏற்பட்டு குழந்தைகளுக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக பாதிக்கப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில்
பெயர் சூட்டப்படாத இரு மாத பெண் குழந்தை 2022 டிசம்பர் 7ம் தேதியும், 2023 ஜனவரி 19ம் தேதி 2 1/2 வயது குழந்தை நித்ரா, 2023 மார்ச் 23 ஆண் குழந்தை ஸ்டாலின் ஆகிய குழந்தைகள் மூச்சுத் திணறலால் உயிரிழந்தன.
இந்த நிலையில் நேற்று இரவு
பிரியா என்ற பிறந்து 57 நாட்கள் ஆன பெண் குழந்தையும், கார்குழி என்ற 3 மாத பெண் குழந்தையும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தது.
இத்தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர்
ஆர் ராஜா விடுத்துள்ள அறிக்கையில்,
ஆதரவற்ற பச்சிளம் குழந்தைகளை பாதுகாக்க அரசு தாய்ப்பால் வங்கிகளை உருவாக்கி, அரசு மருத்துவமனையிலேயே அரசே குழந்தைகளை பராமரிக்க முன்வர வேண்டும்.
மேலும் தமிழக அரசு குழந்தைகள் காப்பகத்தை ஆய்வு செய்து, குழந்தைகள் பராமரிப்பில் குறைபாடு ஏதேனும் உள்ளதா என விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டும். இதன் மூலம் வரும் காலங்களில்
மீதமுள்ள குழந்தைகள்
பாதுகாப்போடு வளர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்டக் குழுவின் சார்பில் வேண்டுகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

