டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்து
திருச்சியில் இருச்சக்கர வாகன பேரணி – காவல்துறையினர்
அனுமதி மறுத்ததால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு …
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கும் அவர்கள் நடத்தும் டிராக்டர் பேரணிக்கும் ஆதரவு தெரிவித்து
திருச்சியில் அனைத்து தொழிற்சங்கம் ஒருங்கிணைப்பு மற்றும் விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் சிலை நிலையில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனப் பேரணியை நடத்த கூடி இருந்தனர்.
திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த பலர் தேசியக் கொடியுடன் இந்த பேரணியில் கலந்து கொள்ள வந்திருந்த நிலையில் பேரணி நடத்த அனுமதி மறுத்ததால் காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மாநகர காவல் துறை துனை ஆனையர் பவன் குமார் தலைமையில் சுமார் 200க்கும் அதிகாமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
தள்ளுமுள்ளுக்கு பிறகு பேரணியாக சென்று மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே நிறைவு செய்தனர்.