திருச்சி மாநகராட்சியில் நடைபெற்ற 72 வது குடியரசு தின விழாவில் ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் கொடி ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.
திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற 72வது குடியரசு தின விழாவில் ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து
நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி சார்பாக மாசற்ற முறையில் 25 ஆண்டுகள் பணி நிறைவுசெய்த 18 நபர்களுக்கு ரூ.2000 ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களும்,
கொரோனா நோய்த் தொற்று தடுப்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய 38 பணியாளர்களுக்கு பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி ஆணையர் கௌரவித்தார்.
பின்னர் காந்திமார்கெட் போர் வீரர்கள் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி காந்தி சந்தை வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
திருச்சி மாநகராட்சி சார்பில் நடைபெற்ற
குடியரசு தின நிகழ்ச்சிகளில் நகரப் பொறியாளர் அமுதவல்லி , நகர் நல அலுவலர் டாக்டர்.யாழினி, செயற் பொறியாளர்கள் சிவபாதம், குமரேசன், உதவி ஆணையர்கள் தயாநிதி, திருஞானம், சண்முகம், பிரபாகரன், வைத்தியநாதன், திருஞானம் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் ,மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டார்கள்.