திருச்சி வாழவந்தான் கோட்டையில்
தொழில் முனைவோர்களுடன் கலந்தாய்வு கூட்டம்.
திருச்சி வாழவந்தான்கோட்டை தொழில்துறை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராம் பிரகாஷ்,செயலாளர் கண்ணன், இணை செயலாளர் பெரியண்ணன்,
ஊடக ஒருங்கிணைப்பாளர் நடராஜன் ஆகியோர் திருச்சி மாவட்ட தொழில் மையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர் அப்போது அவர்கள் கூறியதாவது:-
திருச்சி வாழவந்தான் கோட்டை தொழில்துறை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் வாழவந்தான் கோட்டை சிட்கோ தொழில் பேட்டையில் வருகின்ற 18ந் தேதி (சனிக்கிழமை) தொழில் முனைவோர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு திருச்சி எஸ் பி ஐ மண்டல தலைவர்,துணை பொது மேலாளர் நவீன் குமார் மற்றும் சிட்கோ தலைமை மைய துணை பொது மேலாளர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைக்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில் வாழவந்தான் கோட்டை தொழிற் பேட்டையில் தொடர்புடைய தொழில் அதிபர்கள்,தொழிற்சாலை வைத்திருப்பவர்கள்
கலந்து கொள்ளும் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் புகழ்பெற்ற பல அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர். புதிதாக தொழில் தொடங்குவது குறித்தும், தொழில் பேட்டையில் உள்ள தொழிற்சாலைகள் சந்திக்கு, பிரச்சனைகளுக்கு தீர்வு,
தொழிற்சாலையை லாபகரமாக இயக்குவது குறித்தும் ஆலோசனை வழங்கப்படுகிறது.
இந்த கூட்டத்தின் மூலம் கடைமடையில் உள்ள தொழிலாளர்களுக்கும் நன்மை கிடைக்க வேண்டும் என்பதே ஆகும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்