தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க திருச்சி மாவட்டம் சார்பில்
உலக மகளிர் நாள் விழா கருத்தரங்கம்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க திருச்சி மாவட்டக்குழு சார்பில் இன்று திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில்
உலக மகளிர் நாள் விழா கருத்தரங்கம் நடத்தது.
கருத்தரங்கிற்கு
மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் சத்தியவாணி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் அமுதவல்லி வரவேற்றார்.
சிங்க மங்கைகளே சீறி எழுக சமூக உரிமைகளை மீட்டு பெறவே என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் பரமேஸ்வரி,
மகளிர் நலன் என்ற தலைப்பில் மகப்பேறியில் மருத்துவர் உமா வேல்முருகன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
கன்டோன்மென்ட் காவல்துறை உதவி ஆணையர் கென்னடி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பால்பாண்டி, மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட இணைச் செயலாளர் விமலா, மாதர் சங்க மாவட்ட செயலாளர் சரஸ்வதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
‘ தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத்துணைத் தலைவர் பெரியசாமி நிறைவுரை ஆற்றினார். முடிவில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் அல்போன்சா நன்றி கூறினார்.