திருச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் மற்றும் பென்ஷன் நலசங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
தனியார் பேருந்துகள் இயக்க அனுமதி:
பொதுத்துறைக்கு எதிரான நடவடிக்கையை கைவிட வேண்டும்
அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் பென்சனர் நல சங்க பேரவையின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது.
மாநில தலைவர் மருதமுத்து தலைமை தாங்கினார்.
இணை பொது செயலாளர் மற்றும் பொருளாளர் ஜெயச்சந்திரன், துணைத் தலைவர்கள் குப்புசாமி, பிச்சை துணை செயலாளர்கள் ராகவேந்திரன், வாசுதேவன், நிர்வாக குழு உறுப்பினர் ராஜா ராம் சிங் உள்பட மாநில முழுவதும் இருந்து நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில்
சென்னையில் சமீபத்தில் 500 தனியார் பேருந்துகளை இயக்க அனுமதித்தது போக்குவரத்து கழக தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே பொதுத்துறைக்கு எதிரான இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும். போக்குவரத்தை தனியார் மயமாக்க கூடாது.
ஓய்வூதியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வயதான காலத்தில் சிரமப்படுவதை கருதி அகவிலைப்படி உயர்வினை நிலுவையுடன் வழங்க வேண்டும். ஓய்வூதியர்களின் பிரச்சனைகளுக்கு 100 நாட்களில் தீர்வு காணப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்ததை உடனே நிறைவேற்ற வேண்டும்.
ஓய்வு பெற்று வயதான காலத்தில் மருத்துவ சிகிச்சை பெறக்கூடிய அளவிற்கு பொருளாதாரம் இல்லாத நிலையில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் வழங்கி சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்.
1- 4 -2003 க்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களையும் ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொண்டபடி பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்த்து ஓய்வூதிய பொறுப்பாட்சி குழுவை அரசே நடத்திட வேண்டும்.
பணியின் போது இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு 15 ஆண்டுகளுக்கு மேலாக வழங்காமல் இருக்கும் வாரிசு வேலை நிபந்தனையற்ற முறையில் வழங்க வேண்டும். ஓய்வூதியர்கள் இறந்தால் குடும்ப நலநிதி ரூ. 50 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.