மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் : அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அறிக்கை.
மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் : அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அறிக்கை.
திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.கழக செயலாளர் வெல்லமண்டி த. நடராஜன், சுற்றுலாத்துறை அமைச்சரின்
செய்தி அறிக்கை.
நம் நெஞ்சங்களில் வாழும் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வழியில்
தமிழக முதல்வர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி K. பழனிச்சாமி,
தமிழக துணை முதல்வர் கழக ஒருங்கிணைப்பாளர் 0. பன்னீர்செல்வம் அவர்களின் ஆணைக்கிணங்க
திருச்சி மண்டல பொறுப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளருமான R.வைத்திலிங்கம் வழிகாட்டுதளின்படி
இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து மொழிப் போராட்டத்தில் அன்னை தமிழுக்காக இன்னுயிர் துறந்த மொழிப் போர்த் தியாகிகளுக்கு திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. மாணவர் அணி சாயில் வருகின்ற 25-01-2021-ம் தேதி திங்கட் கிழமை காலை 10.00 மணியளவில் கோர்ட் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் திருஉருவ சிலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தென்னூர் உழவர்சந்தை மைதானத்தில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகிகள் சின்னசாமி. விராலிமலை சண்முகம் ஆகியோர் நினைவிடத்தில் மாலை அணிவித்து, மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு மொழிபோர்த் தியாகிகளை நினைவு கூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் எடத்தெரு, அண்ணாசிலை அருகில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளரும் சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி N. நடராஜன் N.R. சிவபதி, கழக MGR இளைஞரணி செயலாளர், S.முத்துமணி, பு.மணவை மாறன், நல்லுசாமி, திருச்சி மாநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.
அமைதி ஊர்வலத்தில் அமைச்சர்கள் மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட கழக, பகுதி கழக, வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், கழக செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.ஜி.ஆர். மன்றம், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர் தொழிற்சங்க இளைஞர் பேரவை. மகளிர் அணி. மாணவர் வழக்கறிஞர் பிரிவு. அணி, அண்ணா சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, இலக்கிய அணி, மருத்துவ அணி. அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவினை சேர்ந்தவர்கள், வர்த்தக அணி கலை பிரிவு Ex.கோட்டத் தலைவர்கள் உள்ளாட்சி Ex.உள்ளாட்சி தலைவர்கள், பிரதிநிதிகள், கூட்டுறவு தலைவர்கள் தலைவர்கள், இயக்குநர்கள், தலைமை கழக பேச்சாளர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்
என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.