ஜெயலலிதாவின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஏர்போர்ட் அருகே அதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் பொதுக்கூட்டம்
திருச்சி வயர்லெஸ் ரோட்டில்
மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் ரோட்டில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது .பகுதி செயலாளர் ஏர்போர்ட் விஜி தலைமை தாங்கினார்.
பகுதிச் செயலாளர் எம்.ஆர்.ஆர்.முஸ்தபா,இளைஞரணி செயலாளர் சிந்தை முத்துக்குமார் ஆகியோர் வரவேற்று பேசினர்.ஏர்போர்ட் பகுதி துணைச் செயலாளர் கவுன்சிலர் கோ.கு. அம்பிகாபதி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளரும், செய்தி தொடர்பாளருமான கோவை சத்யன், அமைப்புச் செயலாளர் ரத்தினவேல், எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனிவாசன்,ஆவின் சேர்மன் கார்த்திகேயன், தலைமைக் கழக பேச்சாளர்கள் ஜலேந்திரன், அய்யாசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நல்லுசாமி, பகுதி செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ்குப்தா, கலைவாணன்,மற்றும் தொழிலதிபர் என்ஜினியர் ஜெ.இப்ராம்சா, இன்ஜினியர் ரமேஷ், நாட்ஸ்சொக்கலிங்கம், உடையான்பட்டி செல்வம்,ரோஜர், டைமண்ட் தாமோதரன், நாகராஜ், கல்லுக்குழி பாலசுப்பிரமணி, முருகன், சிந்தாமணி முத்துக்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முடிவில் விநாயகமூர்த்தி நன்றி கூறினார்.