திருச்சி சிந்தாமணியில்
வியாபாரியிடம் கத்தி முனையில் பணம் பறித்த இரண்டு பேர் கைது.
திருச்சி திருவரங்கம் லட்சுமி நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 46). பூட்டு வியாபாரி. இவர் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே வியாபாரம் செய்து வந்தார்.
.இந்நிலையில் நேற்று திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த இரண்டு பேர் ரமேஷை கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்த பணத்தை பறித்து சென்றுவிட்டனர் .
இது குறித்து புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிந்து பாலு, ஆனந்த் ஆகிய இருவரும் பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
மற்றொரு சம்பவத்தில் திருச்சி கல்யாணசுந்தர பிறந்தநாளைச் சேர்ந்த மருதமுத்து என்கிற ஆட்டோ டிரைவரின் ஆட்டோவில் இருந்த பேட்டரியை திருடியதாக பாலக்கரையைச் சேர்ந்த ரகுராம் என்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.