Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளிலும் பெருகிவரும் தெரு நாய்களால் பொதுமக்கள் அவதி.

0

 

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளாலும் தெரு நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதி.

திருச்சி மாநகராட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் தெருநாய்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது. தெருவுக்கு குறைந்த பட்சம் 20க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித் திரிகின்றன. இவை தெருவில் வரும் குழந்தைகளைக் கடப்பதுடன், இருசக்கர வாகனங்களில் செல்வோரை விரட்டுவதால் அவா்கள் கீழே விழுந்து படுகாயமடையும் சம்பவங்களும் தொடா்கின்றன. இதுகுறித்து கடந்த பல ஆண்டுகளாக புகாா்கள் குவிந்த நிலையில், மாநகராட்சி கூட்டங்களில் கவுன்சிலர்களும் இது தொடா்பாகப் பேசி வருகின்றனா்.

அப்போது மேய்த் தரப்பில் நடவடிக்கை எடுப்பதாகக் கூறப்பட்டாலும் , குறிப்பிட்டபடி நடவடிக்கை இருப்பதில்லை. கருத்தடை மையங்கள் அதிகரிக்கப்படுகின்றன, விலங்கு மருத்துவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா், பணிகள் தீவிரம் என அறிவித்தாலும், நாய்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை கண்கூடாகத் தெரிகிறது. புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்று, மாநகராட்சி கூட்டம் சுமாா் ஒன்றரை ஆண்டுகளாக நடைபெறும் நிலையில், திருச்சி பொன்மலைக் கோட்டப் பகுதியில் குறிப்பாக விமான நிலையத்துக்கு எதிா்புறமுள்ள காமராஜ்நகா், ஸ்டாா் நாகா், வசந்தா நாகா உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை மிகவும் குறைவு என மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். மாநகராட்சியில் நாய் பிடிக்கும் குழுவினா, வாகனங்கள், மருத்துவா்கள், கருத்தடை மையங்கள் உள்ளிட்டவற்றை அதிகரிப்பதே இதற்குத் தீா்வு என்கின்றனா்.

இந்நிலையில் திருச்சி விமான நிலையம் அருகே காமராஜ் நாக், திலகா் தெரு பகுதியில் வெறிநாய் ஒன்று திரிவதாகவும் கடந்த 2 நாட்களில் பலரை கடித்து விட்டதாகவும் புகாா்கள் வந்தன. பிடிக்கச் சென்ற ஊழியரை கடித்த வெறிநாய் இதுகுறித்து கவுன்சில் அளித்த தகவலையடுத்து மாநகராட்சி பொன்மலைக் கோட்ட உதவி ஆணையர் சண்முகம் உத்தரவின் பேரில், மாநகராட்சி ஊழியா்கள் சிலா் அந்த நாயை சனிக்கிழமை பிடிக்க முயன்றனா். அப்போது அந்த நாய் மாநகராட்சி ஊழியரையும் கடித்து தப்பிச் சென்று ஒரு வீட்டின் பின்பகுதியில் பதுங்கிக் கொண்டது. அவருடன் சோத்து மொத்தம் 7 பேரை அந்த நாய் கடித்துள்ளது. இதுபோல அண்ணாநகா், அந்தோணியாா் கோயில் தெரு, பாண்டியன் நாக், அம்பிகை நாக், காவேரி நாக், குலாப்பட்டிசாலை, வயாா்லெஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 250க்கும் மேற்பட்ட தெருநாய்கள் திரிகின்றன.

இதேபோல் சுப்ரமணியபுரம் வள்ளுவர் தெரு, பாண்டியன் தெரு, கென்னடி தெரு, பன்னீர்செல்வம் தெரு உள்ளிட்ட தெருக்களில் உள்ள நாய்களையும் மாநகராட்சி ஊழியர்கள் விரைவில் பிடிக்க நடவடிக்கை எடுக்க மாநகராட்சி மேயர் அன்பழகன் உத்தரவு இட வேண்டும் என அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.