தமிழகத்தில் ஆயுத பூஜை முதல் தியேட்டர்கள் திறப்பு ?
தமிழகத்தில் ஆயுத பூஜை முதல் தியேட்டர்கள் திறப்பு ?
*தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும் – முதல்வரிடம் தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை*
சென்னை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் கடந்த 12-ந் தேதி காலமானார்.
இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அபிராமி ராமநாதன், ரோகிணி பன்னீர்செல்வம் தலைமையில் தியேட்டர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் இன்று சந்தித்து அவரது தாயாரின் மறைவுக்கு ஆறுதல் கூறினர்.
இந்த சந்திப்பின்போது, ஆயுதபூஜைக்கே (அக்டோபர் 25 வரும் ஞாயிற்றுக்கிழமை) தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என முதலமைச்சரிடம் தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை கடிதத்தை கொடுத்துள்ளனர்.