சந்தைக்கு வெளியே நடைபெறும் வணிகத்திற்கு சந்தை கட்டணம் வசூலிக்க கூடாது திருச்சி மாவட்ட வியாபார கழகத் தலைவர் கோரிக்கை.
சந்தைக்கு வெளியே நடைபெறும்
வணிகத்திற்கு சந்தை கட்டணம் வசூலிக்க கூடாது
திருச்சி மாவட்ட வியாபார கழகம் அரசுக்கு கோரிக்கை.
திருச்சி மாவட்ட வியாபாரக் கழக தலைவர் ஜே.ஜே.எல்.ஞானராஜ் விடுத்துள்ள அறிக்கையில்
கூறியிருப்பதாவது:-
திருச்சி மாவட்ட வியாபாரக் கழகம் சார்பில் பல
ஆண்டுகளாக சந்தைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும், அண்மையில்
வெளியிடப்பட்ட அரசு ஆணையை திரும்ப
பெற வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை மனு திருச்சி மாவட்ட
வியாபாரக் கழகம் சார்பாக பல நேரங்களில் வழங்கப்பட்டது. எங்களது நியாயமான
கோரிக்கையை ஏற்று புதிதாக வெளியிடப்பட்ட அரசு ஆணை படி திரும்ப பெற்று கொள்வதாக அறிவிப்பு
செய்ததற்காக தமிழ்நாடு முதலமைச்சர் , தமிழ்நாடு
வேளாண்மைத்துறை அமைச்சர், உணவு பாதுகாப்புத் துறை மற்றும்
சுகாரத்துறை அமைச்சர், வணிக வரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை
அமைச்சர் ஆகியோருக்கு திருச்சி மாவட்ட வியாபாரக் கழகம் சார்பில் நெஞ்சார்ந்த
நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் எங்களின் நீண்ட கோரிக்கையான சந்தைக்கு வெளியே நடைபெறும் சந்தைக்
கட்டணம் முழுமையாக நீக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். சந்தைக்கு வெளியே
நடைபெறும் வணிகத்திற்கு சந்தைக் கட்டணம் வசூலிக்கப்படுவதால் பல வணிகம்
அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா மாநிலத்திற்கு சென்று விட்டது.
ஒரு சதவீதம்
சந்தைக் கட்டணத்தை வசூலிப்பதால் அரசுக்கு கிடைக்க வேண்டிய சரக்கு மற்றும்
சேவைவரி வசூல் வருவாயும் அண்டை மாநிலங்களுக்கு சென்று விடுவதை கருத்தில்
கொண்டு சந்தைக்கு வெளியே நடைபெறும் வணிகத்திற்கு சந்தைக் கட்டணம்
வசூலிப்பதை கைவிடும்படி திருச்சி மாவட்ட வியாபாரக் கழகம் சார்பில்
கேட்டுக் கொள்கிறோம்.
அண்டைமாநிலமான கர்நாடகத்தில் சந்தைக்கு
கட்டணம் வசூலிப்பதில்லை .
உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின்படி ஒவ்வொரு சிறு, குறு வணிகர்களும்
மற்றும் உணவு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களும் ஒவ்வொரு ஆண்டும் உணவு
பாதுகாப்பு தர நிர்ணய உரிமம் கட்டணத்தை கட்டி புதுப்பிக்க வேண்டும் என்ற
நடைமுறை சட்டத்தினால் சிறு, குறு மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் பெரும் அளவில்
பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு தொழிலுக்கு ஒரு முறை உணவு பாதுகாப்பு தர நிர்ணய
சட்டத்தின் படி உரிமம் எடுக்கப்பட்டால் அந்த நிறுவனங்கள் தம் தொழிலை
நடத்தும் வரை அந்த உரிமம் செல்லும்படியாகும் வகையிலும், உணவு பாதுகாப்பு தர
நிர்ணய உரிமம் கட்டணத்தை ஒரு முறை மட்டும் கட்டுவதற்கான உரிய
நடைமுறைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும் .
இதேபோன்று தமிழகத்தில் வணிக வரித்துறையின் அறிவிப்பு நாள் 06.09.2022 தொடர்ந்து,
வணிக வரித்துறை அலுவலர்கள் சிறு குறு வணிகம் செய்வோரிடம் பொருட்களை வாங்கி
அதனை டெஸ்ட் பர்ச்சேஸ் எனக் குறிப்பிட்டு அதற்கு அபராதமாக ரூ.20,000/- மற்றும்
ரூ.10,000/- முறையே வசூல் செய்கிறார்கள் மேலும் அந்த சிறு குறு வணிகர்களிடம் இருக்கும்
மொத்த பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.20,000/- கூட இருக்காது. சிறு குறு வியாபாரிகள்
விற்கும் பொருட்கள் வாங்கப்படும் போது அதற்கான வரியை செலுத்திதான் அந்தப்
பொருட்களை வாங்குகிறார்கள் பின்பு அதனை பொது மக்களுக்கு விற்பனை
செய்யப்படுகிறது. ஆனால் வணிக வரித்துறை அதிகாரிகள் சிறு குறு வியாபாரிகளிடம்
டெஸ்ட் பர்ச்சேஸ் என்ற முறையில் பொருட்களை வாங்கி அதற்கு இரசீது
வழங்கப்படவில்லையென்று கூறி அபராதம் விதிப்பது சிறு குறு வியாபாரிகளின்
வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது.
மேலும் டெஸ்ட் பர்ச்சேஸ் தொடர்பான நடைமுறை சிக்கல்களுக்கான
விழிப்பணர்வை அனைத்து சிறு குறு நடுத்தரர வியாபாரிகளுக்கும் ஏற்படுத்திய பின், ஆண்டு
ஒன்றுக்கு ரூ.5 கோடிக்கு மேல் விற்று/வரவு செய்கின்றவர்களிடம் மட்டுமே நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும். சிறு குறு நடுத்தரர வியாபாரிகளுக்கு விலக்கு அளித்திட
வேண்டும்.
இவ்வாறு திருச்சி மாவட்ட வியாபாரக் கழக தலைவர் ஜே.ஜே. எல் ஞானராஜ் கூறியுள்ளார்.