ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை
வீடு திரும்புகையில் ரயில் மோதி சாவு.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப் பார் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட ஜல்லிக்கட்டு காளை வீடு திரும்புகையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது.
திருச்சி மாவட்ட் திருவெறும்பூர் பழங்கனாங்குடியை சேர்ந்தவர் சுதாகர். இவரது ஜல்லிக்கட்டு காளை, ஞாயிற்றுக்கிழமை காலை திருவெறும்பூர் அருகேயுள்ள கூத்தைப்பார் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொண்டது. பின்னர் அங்கிருந்து ஓடிய காளை பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிந்துள்ளது. எப்போதும் வழக்கமாக வீட்டிற்கு வந்துவிடும் காளை வராததை அடுத்து, திங்கள்கிழமை காலை சுற்றுப்பகுதியில் சுதாகர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் காளையை தேடியுள்ளனர்.
இந்நிலையில், தஞ்சை திருச்சி ரயில் மார்க்கத்தில், கிருஷ்ண சமுத்திரம் அருகே, ரயிலில் அடிபட்டு உடல் துண்டான நிலையில் காளை இறந்து கிடந்தது தெரியவந்தது.
அதனைக் கண்ட மாட்டின் உரிமையாளர் கதறி அழுதார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.