திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வருகின்ற 15.01.202 அன்று திருவள்ளுவர் தினம்,
26.01.2021 (ஞாயிற்றுக்கிழமை) குடியரசு தினம் மற்றும் 28.01.2021 (வியாழன்கிழமை)
வள்ளலார் நினைவு நாள் ஆகிய மூன்று நாட்களுக்கு அரசு விடுமுறையை முன்னிட்டு
சில்லறை மதுபானக் கடைகள் மற்றும் FL1, FL2, FL3, FLZA, FLZAA மற்றும் F.L.11
பார்கள் அனைத்தும் மூடப்படும் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு
அறிவிப்பு.
2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15.01.2021 (வெள்ளிக்கிழமை) திருவள்ளுவர்
தினம், 26.01.2021 (ஞாயிற்றுக்கிழமை) குடியரசு தினம் மற்றும் 28.01.2021
(வியாழன்கிழமை) வள்ளலார் நினைவு நாள் ஆகிய மூன்று நாட்களுக்கு
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக்
கடைகளும் மூடப்பட்டிருக்கும்.

மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்
கூடங்கள், FL1/ FL2/ FL3/ FL3A/ FL3AA மற்றும் F.L.11 முதலான ஹோட்டல்
பார்களிலும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும்.
எனவே அன்றைய
தினம் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் பார்கள் அனைத்தும்
மூடியிருக்கும். என மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு
தெரிவித்துள்ளார்.