ஸ்ரீ அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி தலைமை அஞ்சலகம் அருகில் உள்ள ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவிலில் நேற்று இன்று நாளை மூன்று நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
முதல்நாளான நேற்று ஸ்ரீ மகா சுதர்சன ஹோமம் நடைபெற்றது.
இன்று ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் சுவாமிக்கு 10,008 வடை மாலை சாற்றுபடி வைபவம் நடைபெற்றது.
நாளை பகல் 12 மணிக்கு மாபெரும் அன்னதானம் நடைபெற உள்ளது.
நிகழ்ச்சிகளில் பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
விழா ஏற்பாட்டினை பரம்பரை அர்ச்சகர் சுரேஷ், பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்து உள்ளனர்.