திருவெறும்பூர் அருகே
இளம் பெண்ணுக்கு இயற்கைக்கு மாறான செக்ஸ் டார்ச்சர்,
கணவர் மீது போலீசில் புகார்.
திருச்சி திருவெறும்பூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஷைலா (வயது 30). இவருக்கும் கோவை பகுதியை சேர்ந்த ஜவாஹிருல்லா மகன் முகமது நவ்ஷாத் என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் தினமும் முகமது நவ்ஷாத் இயற்கைக்கு மாறான முறையில் மனைவியை டார்ச்சர் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சைலா மிகுந்த மனவேதனைக்கு ஆளானார். பின்னர் ஒரு கட்டத்தில் கணவரை அவர் கண்டித்தார்.
இதைத் தொடர்ந்து கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முகமது நவ்ஷாத் ஷைலாவை வீட்டிலிருந்து அடித்து வெளியே துரத்தி விட்டார். இந்த சம்பவத்தில் ஷைலாவின் மாமியார் நாய்ஷா பீவி, மாமனார் ஜவாஹிருல்லா, மைத்துனி ஷிபனா ஆகியோரும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஷைலா திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதன் பேரில் திருவரம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சைலாவை துன்புறுத்திய அவரது கணவர் உள்ளிட்ட நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை அதிகாரியிடம் கேட்டபோது புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின்னரே முழு விவரம் தெரியவரும் என கூறினர்.