Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு.

0

'- Advertisement -

திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகரில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு.

திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகர் விரிவாக்கம் பகுதியில் தனியார் நிறுவனத்தின் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக தனி நபர் அனுமதித்ததின் பேரில் ஒரு வீட்டில் ராட்சத குழி தோண்டப்பட்டுள்ளது. இதனால் அருகாமையில் உள்ள வீடுகள் கீழே இடிந்து விழும் நிலைமை உள்ளதாகவும், செல்போன் கோபுரம் அமைத்தால் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கதிர்வீச்சினால் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், அருகிலேயே பள்ளி உள்ளதாகவும் இதனால் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அங்கு பணிக்காக வந்திருந்த ஊழியர்களை முற்றுகையிட்டனர்.

பின்னர் இந்த சம்பவம் அறிந்த பொன்மலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நடத்திய பேச்சு வார்த்தையில் பணிகள் நிறுத்தப்பட்டது.

அந்த இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்கப்படாது என இடத்தின் உரிமையாளர் உறுதி அளித்ததின் பேரில் அப்பகுதி பொது மக்கள் கலைந்து சென்றனர்.

பணி செய்ய வந்த ஊழியர்களை பணி செய்ய விடாமல் பொதுமக்கள் ஒன்று திரண்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது..

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.