பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்க வலியுறுத்தப்பட்டது
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு
பாஜக ,த.மா.கா ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு.
கரும்புக்கு நியாயமான ஆதார விலை தர வேண்டும்.பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் மூன்று இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது விவசாயிகள் சாலையில் படுத்து அரை நிர்வாணம் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
பொங்கல் தொகுப்பில் கரும்பு, தேங்காய், வெல்லம் வழங்காத திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
திருச்சியில் பா.ஜ.க விவசாய அணி மாநகர், மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம். நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், புறநகர் மாவட்ட விவசாய அணி தலைவர் சசிக்குமார், மாநில விவசாய அணி துணை தலைவர் கோவிந்தராஜன், இளைஞரணி கெளதம் நாகராஜ், வரகனேரி பார்த்திபன்,முன்னாள் மாவட்ட தலைவர் திருமலை, ஒண்டிமுத்து, காளீஸ்வரன், தண்டபாணி, கள்ளிக்குடி ராஜேந்திரன், சந்துரு, முத்தையன்.எஸ் பி சரவணன் ஏ.ஆர்.பாட்சா, மல்லி செல்வம்,மிலிட்டரி நடராஜன், முருகானந்தம் மற்றும் திரளானோர் கலந்துகொண்டனர்.ஆர்ப்பாட்டத்தின் போது பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கையில் கரும்பை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இதேபோன்று
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் செங்கரும்புக்கு அரசு நியாயமான விலை வழங்க கோரி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் நுழைவாயிலில் சாலையில் அமர்ந்து அரை நிர்வாண போராட்டம் நடத்தினார்கள்.
இந்த போராட்டத்தின் போது விவசாயிகள் சட்டையை கழற்றிவிட்டு கையில் கரும்பு ஏந்தி போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.மேலும் பொங்கல் தொகுப்பில் கரும்பை சேர்த்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் மேகராஜன்,பரமசிவம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக விவசாயிகள் கலெக்டர் நுழைவாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்,தகவல் அறிந்து அதிகாரிகள் விரைந்து வந்து விவசாய சங்க பிரதிநிதியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில் திடீரென்று விவசாயிகள் கலெக்டர் அலுவலக மெயின் கேட்டை பூட்டிவிட்டு தரையில் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.பிறகு தகவல் அறிந்து மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கைகளை அரசுக்கு தகவல் தெரிவிப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டி திருச்சி மாவட்ட விவசாய அணி சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமாகா விவசாயக் அணி மாவட்ட தலைவர் புங்கனூர் செல்வம் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் தேவராஜன்,சாகுல் ஹமீது அழகப்பன் ஜோசப், ரிச்சர்ட், சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைக்கு ரூபாய் 50 கமிஷன் வாங்குவதை கண்டித்து கையில் நெல்லை ஏந்தி கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் , தமிழக அரசு விவசாயிகள் உற்பத்தி செய்யும் செலவினங்களை கணக்கிட்டு நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ3000, கரும்புக்கு ரூ4000 நிர்ணயம் செய்ய வேண்டும்.
தாலுகா அளவில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் வருடம் முழுவதும் செயல்படும் வகையில் அமைக்க வேண்டும்.
நெல் கொள்முதல் நிலையங்களில் 41 கிலோ மூட்டைக்கு ரூ40 கமிஷனும், அரை கிலோ கூடுதல் நெல்லும் கொள்முதல் செய்வதை தடுக்க வேண்டும்.அயன் நஞ்சை நிலங்கள், நஞ்சை நிலங்கள் ஆகியவற்றை வீட்டு மனைகளாக மாற்றுவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பினர்.அப்போது விவசாயிகள் கையில் நெல்லை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இன்று திருச்சி மாநில கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாஜக,தமிழ் காங்கிரஸ் மற்றும் அய்யாகண்ணு தலைமையிலான விவசாயிகள் என பலநூறு விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.