திருச்சி எடமலைப்பட்டி புதூரில் வங்கி அதிகாரி வீட்டில் 6 பவுன் நகைகள் திருட்டு.
திருச்சி எடமலைப்பட்டி புதூர்மெயின் ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராம் மோகன் (வயது 49). இவர் தேசிய மயமாக்கப்பட்ட ஒன்றில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று இவரது வீட்டிலிருந்த கம்மல், மோதிரம், செயின் உட்பட ஆறு பவுன் தங்க நகைகள் திருட்டு போய்விட்டது.
இது குறித்து வங்கி அதிகாரி ராம்மோகன் எடமலைப்பட்டி புதூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பேபி உமா வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகிறார்.