நல்லாட்சி வாரம்.திருச்சி மண்டலம் 3.பொதுமக்களின் குறைகள் குறித்த மனுக்கள் மீது உடனடி தீர்வு. தலைவர் மதிவாணன்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 19.12.2022ம் தேதி அன்று நல்லாட்சி வாரம் பொதுமக்கள் மாநகராட்சி தொடர்புடைய மனுக்களை மண்டலம் மூன்றில் பொதுமக்கள் அளித்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அனைத்து மண்டல அலுவலகங்களிலும் 19.12.22 நேற்று நல்லாட்சி அனுசரிப்பு வாரம் சிறப்பு முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.
இந்த சிறப்பு முகாமில் மாநகராட்சி மண்டலம் மூன்றுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் குறைகள் குறித்த மனுக்களை பொதுமக்கள் 3ஆம் மண்டலம் தலைவர் மதிவாணன் மற்றும் துணை ஆணையர் தயாநிதி செயற்பொறியாளர் ஜெகஜீவன் ராம்,உதவி வருவாய் அலுவலர் தாமோதரன்,பொது சுகாதார குழு தலைவர் நீலமேகம் மற்றும் வாடு மாம்மன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி சம்பந்தப்பட்ட மனுக்களை அளித்தனர்.
பொதுமக்களின் குறைகள் குறித்த மனுக்களின் மீதான விசாரணையை உடனடியாக மேற்கொண்டு பொதுமக்கள் குறைகளை உடனடியாக தீர்க்கப்படும் என மண்டலம் தலைவர் மதிவாணன் மற்றும் மண்டலம் அதிகாரிகள் கூறினார்.