Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஜெயலலிதாவை அதிமுகவினர் மறந்துவிட்டனர். உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

0

திருச்சி வடக்கு மாவட்ட மண்ணச்சநல்லூர் எதுமலை சந்திப்பில் 3000த்திற்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் பட்டாசு வெடித்து, மேளதாளங்கள் முழங்க மிகுந்த ஆரவாரத்துடன் உற்சாகத்துடன் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை வரவேற்றனர்.அதனை தொடர்ந்து வேனில் பேசிய கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது….

செல்லும் இடமெல்லாம் எழுச்சியுடன் மிகுந்த ஆர்வத்துடன் வரவேற்கிறார்கள்.

இதை காணும் உங்களின் முடிவு தெரிந்து விட்டது.

தலைவர் 234 தொகுதியில் 200 வெற்றி பெற செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார், கடந்த 18 நாளாக நான் பிரச்சாரம் செய்து வருகிறேன், உங்களின் எழுச்சியை காணும் போது 234 நாம் வெற்றி பெறுவோம்.

அதிமுக செய்த ஊழல்களை ஆதாரங்களுடன் ஆளுநரிடம் வழங்கியுள்ளோம். ஆனால் அதிமுக அரசு ஆட்சியில் இல்லாத நம்மீது குற்றம் சாட்டியுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை காரணமானவர்களை தண்டிக்கவில்லை என்றால், வரும் திமுக ஆட்சியில் அவர்கள் சிறை செல்வது உறுதி.

பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களை நேரடியாக அவர்கள் விரும்பிய படிப்பை நுழைவுத் தேர்வு இல்லாமல் சேர வைத்தவர், முத்தமிழ் அறிஞர் கலைஞர்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் கூட நீட்தேர்வு இல்லை, ஆனால் தற்பொழுது இருக்கும் அடிமை அதிமுக ஆட்சியில் நீட் தேர்வை புகுத்தி பல மாணவர்களின் கனவை சிதைந்து, உயிரை பறிக்கின்றனர்.

திமுக ஆட்சியில் மக்களுக்கு இலவசமாக தொலைக்காட்சி, மின்சாரம் அடிப்படைத் தேவைகள் வழங்கப்பட்டன.

தேர்தலில் வாக்கு எந்திரத்தில் நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் அளிக்கும் வாக்கு தான் எடப்பாடிக்கு நரேந்திர மோடிக்கு வைக்கும் சரியான ஆப்பு
திருச்சி மண்ணச்சநல்லூர் ஒன்றியம் திருப்பைஞ்ஞீலி ஆயிரக்கணக்கான கழகத்தினர் விழுந்த உற்சாகத்துடன, ஆரவாரத்துடன் பட்டாசுகள் வெடித்து மேளதாளங்கள் முழங்க சாலையின் இருபக்கமும் மாவிலை தோரணங்கள் கட்டி வரவேற்பு அளித்தனர்.

அதனை தொடர்ந்து பேசிய அவர்…

அனிதா மரணம் தற்கொலையா , நீட் தேர்வை கொண்டு வந்து, அதிமுக அரசு கடந்து 4 ஆண்டுகளில் அனிதா போன்று 14 மாணவர்களின் உயிரை பறித்துள்ளது.

சாலை போடும் ஒப்பந்தத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஊழல், கார் தொழிற்சாலை ஒப்பந்தத்தில் ஓ பன்னீர்செல்வம் ஊழல், உள்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி சாலை விளக்கு ஒப்பந்தத்தில் ஊழல்.

ஜெயலலிதாவை 90 நாட்கள் மருத்துவமனையில் வைத்து, தினமும் அம்மா இட்லி சாப்பிட்டார்கள் சட்னி சாப்பிட்டார்கள். அவரின் இறப்பு குறித்து இது வரை தெரியவில்லை.

அதிமுகவினர் ஜெயலலிதாவை மறந்துவிட்டனர்.

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு வாக்களித்து, 234 திமுக கூட்டணியே வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
துறையூர் பேருந்து நிலையம் அருகில் பேசிய கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது….

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியை விரட்டி அடித்தது போல, வரும் சட்டமன்ற தேர்தலிலும் மாபெரும் வெற்றியைப் பெற செய்ய வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து.

அதிமுக ஆட்சியில் அனைத்திலும் ஊழல்.துறையூர் முத்தையம் பாளையத்தில் உள்ள சிவாலயா திருமண மண்டபத்தில் இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது…

மக்களிடம் இந்த அதிமுக அரசின் ஊழல் குறித்து சொல்லுங்கள்

திருச்சி வடக்கு மாவட்ட உள்ள 3 சட்ட மன்ற தேர்தலில் இளைஞரணி சேர்ந்தவர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப இன்னும் 3 மாதம் தான் உள்ளது.

உங்களின் ஒவ்வொரு வாக்கும் 10 வாக்காக மாற வேண்டும்

திமுக 19 சார்பு அணிகள் இருந்தாலும், முதல் இடத்தில் எப்பொழுதும் இளைஞரணி தான்.

இதில் திமுக இளைஞரணி செயலாளர் முன்னிலையில் 75 பேர் திமுகவில் இணைந்தனர்.திருச்சி நாகலாபுரத்தில் உள்ள சிற்பக் கலைஞர்களின் முத்த முன்னோடியான வி.நடராஜன் மணி மண்டபத்தில் நேரில் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்பு அதே பகுதியில் சிற்ப கலைக் கூட்டத்திற்கு சென்று சிற்பங்களை பார்வையிட்டு, சிற்பிகளுடன் கலந்துரையாடினர்.

அதனை தொடர்ந்து, கழக முத்த முன்னோடி கோவிந்தராஜ் உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அவர் கழக மூத்த முன்னோடி கோவிந்தராஜ் வீட்டிற்கு சென்று அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.

பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலை விபத்தால் பாதிக்கபட்ட உயிரிழந்த துறையூர் ஒன்றிய அவைத்தலைவர் துரைராஜ் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.