பாஜக திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன் ஜாமினில் விடுதலையாகி நேராக அம்பேத்கார் சிலைக்கு வந்து மாலை அணிவித்து மரியாதை.
கடந்த வெள்ளிக்கிழமை புத்தூர் நான்கு ரோடு அருகே உள்ள பிரபல கல்லூரியின் அருகே மதுபான கேளிக்கை விடுதி தொடங்க அனுமதி அளிக்கக்கூடாது என திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜசேகரன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வரை ஆபாசமாக பேசியதாக கூறி மாவட்ட தலைவர் ராஜசேகர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன் மீது போலீசார் மேலும் பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து பெயில் கிடைக்க விடாமல் மேலும் சில நாள் சிறையில் அடைக்க முயற்சி செய்தனர்.ஆனால் நீதிமன்றத்தில் காவல்துறையினரின் புனையப்பட்ட வழக்கு இது என நீதிபதிகள் கூறி இன்று மாவட்ட தலைவர் ராஜசேகரனுக்கு ஜாமீன் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து இன்று மதியம் 2 மணி அளவில் திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுதலையான ராஜசேகரன் இன்று அம்பேத்கரின் 66-வது நினைவு நாள் என்பதால் நேரடியாக அரிஸ்டோ ரவுண்டானத்தில் உள்ள அம்பேத்கரின் மாலை அணிவிக்க வந்தார்.அங்கு ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் குவிந்து இருந்தனர்.
அனைவரிடமும் சகஜமாக பேசிவிட்டு அம்பேத்கரின் திருவரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியின் போது முன்னாள் மாவட்ட தலைவர் பார்த்திபன்,
சிவசுப்பிரமணியன்,செய்தி மக்கள் தொடர்பாளர் இந்திரன்,மண்டல் தலைவர்கள்,மகளிர் அணியினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு இருந்தனர்.
தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியை கண்டு திமுக அச்சம் அடைந்து உள்ளது.எங்கள் மாவட்ட தலைவரை கைது செய்யப்பட்டதன் மூலம் இது அப்பட்டமாக தெரிய வருகிறது.பாஜகவினரை கைது செய்தால் அடங்கி விடுவார்கள் என திமுக கனவு காண்கிறது. இனிமேல் தான் நாங்கள் மக்கள் பணியை இன்னும் மிக தீவிரமாக செய்வோம்.
மக்களுக்காக போராடி சிறைச்செல்ல பாஜகவினர் யாரும் தயங்க மாட்டோம்.மதுபான கேளிக்கை விடுதியை திறக்க கூடாது என நாங்கள் போராடியதால் ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புடன் தமிழக அரசு அந்த தனியாரின் கேளிக்கை விடுதியை திறந்து உள்ளது.படிப்படியாக டாஸ்மாக் கடைகளை குறைப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த விடிய அரசு லிப்ட் வேகத்தில் தனியா மதுபான கேளிக்கை விடுதிகளை தமிழகமெங்கும் திறந்து வருகிறது. இதை தமிழகம் முழுவதும் உள்ள பாமர பொது மக்களுக்கு இனி எடுத்து கூறுவோம்.
எங்கள் தமிழக தலைவர் அண்ணாமலை, திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன் கரத்தை பலப்படுத்துவோம் என அங்கிருந்த பாஜக தொண்டர் ஒருவர் கூறினார்.