திருச்சியில் மிலாது நபி, மத நல்லிணக்க விழா.முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.
திருச்சி அரியமங்கலம் காமராசர் நகரில் மில்லத் பள்ளிவாசல் அருகில் மிலாது நபி விழா,மத நல்லிணக்க விழா நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட துணைசெயலாளர் A.முகமது இக்பால் தலைமை தாங்கினார். மாநில மாணவரணி தலைவர் மு.ஆரிபுல்லா வரவேற்புரையாற்றினார்.மாவட்ட இளைஞரணி செயலாளர் மஜீத் நன்றியுரை நிகழ்த்தினார்.
மாவட்ட இளைஞரணி தலைவர் சபீக், திருவெறும்பூர் ஒன்றிய தலைவர் ஜான் பாஷா, அப்துல் லத்தீப், முகமது இர்பான், ஆகியோர் முன்னிலை வசித்தனர்.
கூட்டத்தில் முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் சிறப்புரையாற்றினார்.திருச்சி மருத்துவக் கல்லூரி டீன் நேரு அவர்கள் வாழ்த்துரை வழங்கி ஏழைகளுக்கு இலவச சேலை வழங்கினார்.
கூட்டத்தில் முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக மாநில கொள்கை பரப்பு செயலாளர் வடலூர் பக்ருதீன், மாநில அமைப்பு செயலாளர் குழுமூர் முகமது அலி,மாநில இளைஞரணி தலைவர் கூனிமேடு முஸ்தபா, தயாநிதி 3வது கோட்ட உதவி ஆணையர் ஆகியோர் மத நல்லிணக்க உரையாற்றினார்கள்.
கூட்டத்தில் 150 ஏழை பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டது.