ஸ்ரீரங்கத்தில்.
பங்குச்சந்தை தொழில் செய்தவர் தூக்குப்போட்டு தற்கொலை.
உருக்கமான கடிதம் சிக்கியது.
திருவரங்கம் வீரேஸ்வரத்தில் பங்குச்சந்தை தொழில் செய்து வந்தவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
இது பற்றிய விவரம் வருமாறு:-
திருவரங்கம் வீரேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 55). இவர் திருமணம் ஆகாதவர். பங்குச்சந்தை தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு, மின்விசிறியில் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த கடிதத்தில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும் எழுதி வைத்துள்ளார்.
இது குறித்து அவரது சகோதரர் சுரேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் உடலையும், கடிதத்தையும் கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக சிவக்குமாரின் உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து திருவரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.