திருச்சி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து
அதிர்ஷ்டவசமாக 24 பயணிகள் பத்திரமாக மீட்பு.
திருப்பதியில் இருந்து மதுரைக்குச் சென்ற தனியார் பேருந்து இன்று அதிகாலை திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் அருகே உள்ள கள்ளிக்குடி புதிய மார்க்கெட் கட்டிடம் அருகே சென்றபோது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து ஒரு பக்கமாக கவிழ்ந்தது. பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் பஸ்ஸை ஓட்டிச் சென்றார்.
பஸ் கவிழ்ந்த போது பயணிகள் தங்களைக் காப்பாற்றுமாறு கூக்குரல் எழுப்பினர்.
அருகில் இருந்த பொதுமக்கள் பயணிகளை மீட்டு மணிகண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் , அதிர்ஷ்டவசமாக
பேருந்தில் பயணம் செய்த 24 பெரும் லேசான உயிர் தப்பினர். அவர்களை மாற்று பேருந்து ஏற்பாடு செய்து அனுப்பி வைக்கப்பட்டது.
சம்பவம் குறித்து மணிகண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் தொடர்ந்து பேருந்தை அந்த பகுதியில் இருந்து கிரேன் மூலம் அப்புறப்படுத்தினார், இதனால் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது
கடந்த செப்டம்பர் மாதம் இதே பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மதுரையைச் சேர்ந்த
சட்ட கல்லூரி மாணவர் வலது கால் துண்டிக்கப்பட்டது. பின்னர் அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். மீண்டும் அதே பகுதியில் இந்த விபத்து இன்று நடந்துள்ளது
தொடர்ந்து இந்த பகுதியில் பொதுமக்கள் வைக்கக்கூடிய கோரிக்கை என்பது, சர்வீஸ் சாலைகள் முறையாக அமைக்காமல் மண் குவியல் , சாலை பராமரிப்பு இல்லாததால்தான் விபத்துக்கு காரணம் என தெரிவிக்கின்றனர்.