Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சேவா சங்கம் பள்ளியின் 75 ஆம் ஆண்டு விழா.கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சி சேவா சங்கம் பள்ளியின் 75ம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

திருச்சி சேவா சங்கம் பள்ளி ஆண்டு விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமை வகித்து தங்கப்பதக்கம் வென்ற பத்தாம் வகுப்பு மாணவி தரண்யா, மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகள் வனஜா,பவித்ரா ஆகியோருக்கு பதக்கங்களை வழங்கினார்.

முன்னதாக சேவா சங்கம் செயலாளர் சரஸ்வதி அனைவரையும் வரவேற்றார்.சேவா சங்கம் தலைவி சகுந்தலா சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்து கௌரவித்தார்.

TVK ad

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சேவா சங்கம் மேல்நிலைப்பள்ளி,தஞ்சம்மாள் நினைவு தொடக்கப்பள்ளி.
சியாமளா நர்சரி பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியினை சேவா சங்கம் பள்ளி செயலாளர் கீதா கௌரி,துணைத் தலைவி கமலா பண்டரி,
பொருளாளர் லட்சுமி சுப்பிரமணியன், பள்ளி தலைமை ஆசிரியை நாகம்மை மற்றும் ஆசிரிய பெருமக்கள் சிறப்பாக ஒருங்கிணைத்து இருந்தனர்.

முடிவில் சேவா சங்க நிர்வாக குழு உறுப்பினர் திலகவதி அனைவருக்கும் நன்றி கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.