திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் 70 அடி கொடிக்கம்பத்தில் கழகக் கொடியை ஏற்றினார் உதயநிதி ஸ்டாலின்.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எம்எல்ஏ தலைமையில், துவரங்குறிச்சி பொன்னம்பட்டி பேரூரில் 70 வது அடி உயர கொடிகம்பத்தில் தி.மு.கழக கொடியினை கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.
உடன் செயற்குழு உறுப்பினர் கே.என். சேகரன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ், பொன்னம்பட்டி பேரூர் கழக செயலாளர் கருப்பையா மற்றும் திரளான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.