சிவசேனா கட்சியின் தமிழக சட்டமன்ற தேர்தல் வரைவு அறிக்கை மாநில தலைவர் ரவிச்சந்திரன் திருச்சியில் வெளியிட்டார்.
திருக்குலத்தோர், முக்குலத்தோர், வன்னியர், வெள்ளாளர், நாடார்,சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு,
திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் தமிழக தலைநகரங்களாக ஆக்கப்படும்,
அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திருவள்ளுவர், மாமன்னர் ராஜராஜ சோழன் சிலைகள் நிறுவப்படும்,
பத்தாம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை,
அனைத்து மாவட்டத்திலும் விவசாய கல்லூரி,
இளைஞர்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் இரண்டு தொழிற் பேட்டைகளை உருவாக்கி வேலைவாய்ப்பு,
வேலையற்ற இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்க புதிய வாரியம் அமைத்து வங்கி கடன் வழங்கப்படும்,
அனைத்து சாதியினருக்கும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம்,
10, 12, ஆண்டுகளுக்கு ஒருமுறை அனைத்து கோயில்களிலும் கும்பாபிஷேகம்,
கோயில் அரசியலுக்கு மற்றும் பணியாளர்களுக்கு மாத சம்பளம் 10,000/- ஓய்வூதியம் மற்றும் பயன்கள் வழங்கப்படும்,
அனைத்து மாவட்டத்திலும் உள்ள தமிழ் அறிஞர்கள், இந்து அறிஞர்களுக்கு மாதாமாதம் ஓய்வூதியம்,
தமிழகத்தில் இந்துக்களுக்கான வங்கி தொடங்க முயற்சி மேற்கொள்ளப்படும்,
இலவசங்களை நிறுத்திவிட்டு ஆண்டுக்கு 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு,
இந்து மதத்தை, இந்து மத கோட்பாடுகளை, இந்து மத தெய்வங்களை இழிவுபடுத்துவோர் மீது 5 ஆண்டுகள் தண்டனை விதிக்க சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்படும்.
உள்ளிட்ட அறிக்கைகளை தேர்தல் அறிக்கையாக தமிழ்நாடு சிவசேனா கட்சித் தலைவர் ரவிச்சந்திரன் வெளியிட அதனை மாநில செயலாளர்கள் டாக்டர். சுந்தரவடிவேல், எஸ்.பி.சரவணன், பிச்சைமுத்து ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
அருகில் மாநில துணை செயலாளர் மனோஜ்குமார், தஞ்சை மண்டல தலைவர் வின்சென்ட், திருச்சி மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் சிவபெருக இளங்கோவன், மாவட்ட செயலாளர்கள் கே.பி.மணி, எஸ்.சீனிவாசன் மற்றும் பலர் அருகில் இருந்தனர்.