திருச்சியில் மன்னன் அரையர் சுவரன் மாறன் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று முத்தரையர் சங்க இளைஞர் அணி செயலாளர் ஆர்.வி.பரதன் வேண்டுகோள்.
திருச்சியில் அரையர் சுவரன் மாறன் பிடாரி அறக்கட்டளை மற்றும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக தொல்லியல் துறை சார்பில் திருச்சியில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் முத்தரையர் சங்க இளைஞர் அணி செயலாளர் பரதன் பேசுகையில் கல்லணை பகுதியில் 25 ஏக்கர் பரப்பளவில் அரையர் சுவரன் மாறன் அருங்காட்சியகத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் எனவும் அரையர் சுவரன் மாறன் மன்னன் புகழை ஜாதி ரீதியாக மறைக்கக்கூடாது என்றும் வருங்கால சந்ததியினருக்கு அவன் தமிழருக்கு செய்த தொண்டுகள் மற்றும் வரலாற்று சுவடுகள் அரசால் வெளிக்கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதில் பேராசிரியர் சந்திரசேகரன், கல்வெட்டு ஆய்வாளர் ராமச்சந்திரன், முனைவர்.ஜான் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.