திருச்சியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் தமிழ்செல்வி தலைமையில் நடைபெற்றது.
இதில் பொது செயலாளர் லக்ஷ்மிநாராயணன், மாநில செயலாளர்கள் சாமி, குணம் ராஜசேகர், கோவிந்தம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட மாநில நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய மாநில நிர்வாகிகளை இந்த மாநில பொதுக்குழுவில் தேர்வு செய்வது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.