திருச்சி உறையூரில்
சுய உதவிக் குழு பெண்கள் பெயரில் கடன் பெற்று ரூ.27 லட்சம் மோசடி.
பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையம் முற்றுகை.
திருச்சி உறையூர் பாண்டமங்கலம் முஸ்லிம் தெருவை சேர்ந்த ஷர்மிளா ரேஷ்மா கரிஷ்மா தாஜு நிஷா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பெண்கள் உறையூர் காவல் நிலையத்தை இன்று முற்றுகையிட்டு ஒரு புகார் மனு அளித்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
நாங்கள் மகளிர் சுய உதவி குழுவில் உறுப்பினராக இருக்கின்றோம்,
இந்த நிலையில் குழுவின் தலைவியாக இருக்கும் வகிதா பானு என்பவர் எங்களின் பெயரில் ரூப ஒரு லட்சம் இரண்டு லட்சம் என ரூபாய் 27 லட்சம் கடன் பெற்றார்.
பின்னர் அந்த தொகையை வாரந்தோறும் அவரே செலுத்தி வந்தார்.
இந்த நிலையில் மூன்று வாரங்களுக்கு முன்பு திடீரென எங்கள் பகுதியில் குடியிருந்து வந்த அவரும் அவரது கணவரும் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டனர் இப்போது வங்கி அதிகாரிகள் எங்களிடம் வாரந்தோறும் பணத்தை செலுத்த வேண்டும் என கூறுகிறார்கள்
வாங்காத கடனுக்கு நாங்கள் இரண்டு வாரம் பணத்தை செலுத்தி விட்டோம்.
இப்போது வங்கி அதிகாரிகள் எங்களை மிரட்டுகிறார்கள்.
எனவே சம்பந்தப்பட்ட வரை கைது செய்து எங்கள் பெயரில் பணத்தை வாங்கி மோசடி செய்த தம்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.