திருச்சி மாநகர மதுவிலக்கு பிரிவு காவல் துறையினர் கடந்த ஜீலை மாதம் 9ஆம் தேதி காந்தி மார்க்கெட் பிச்சை நகர் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு அரசு நிர்ணயித்த நேரத்திற்கு முன்பாகவே காலையில் டாஸ்மாக் பாரில் மது பாட்டில்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு 41 குவட்டர், 5 ஆப், 28 பீர் 74 மது பாட்டில்கள் மற்றும் 400 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இதை விற்பனை செய்த பாலக்கரை துரைசாமிபுரம் பகுதியை சேர்ந்த மனோகரன் (வயது 63) என்பவர் தப்பிச்சென்றதால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த மனோகரனை நேற்று மதுவிலக்கு பிரிவு காவல் துறை ஆய்வாளர் வசுமதி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.