துறையூரில் தி.மு.க.சார்பில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், துறையூர் நகரில் நகர தி.மு.க.சார்பில் 2வது வார்டில் நகர செயலாளர் முரளி தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பொதுமக்களிடம் குறைகளை நேரடியாக கேட்கபட்டு மனுக்களும் பெறப்பட்டது.
சில கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் பேசி குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதிகள் மதியழகன், கார்த்திகேயன், துணை செயலாளர் சுதாகர், மாவட்ட இளைஞரணி கிட்டப்பா,நகர இளைஞரணி சிலம்பரசன் வார்டு செயலாளர் மணி, .சுரேஷ், திலக், சீனிவாசன் உட்பட ‘ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் .