திருச்சியில் நெல்லையை சேர்ந்த பெண் தற்கொலை.
திருநெல்வேலியைச் சேர்ந்த பெண் திருச்சியில் மகன் வீட்டுக்கு வந்திருந்த நிலையில் தூக்கிட்டுத் தற்கொலை கொண்டார்.
திருநெல்வேலியை சேர்ந்தவர் ராஜபாண்டி மனைவி லதா (வயது 50). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, திருச்சி மாவட்டம் நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் உள்ள தனது மகன் கோபிநாத் வீட்டுக்கு வந்துள்ளார். உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சில நாள்களாக மகன் வீட்டிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், தாயாருக்கு மருந்து மற்றும் உணவு வாங்குவதற்காக இன்று காலை கோபிநாத் வெளியே சென்று பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
வீட்டில் வந்து பார்த்த போது, லதா தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். அதிர்ச்சி அடைந்த கோபிநாத் இச்சம்பவம் குறித்து நபல்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.