திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே தரைக் கடை வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு.
திருச்சி மாநகர் மாவட்ட தரைக்கடை மற்றும் சிறுக்கடை வியாபாரிகள் சங்கத்தினர், தங்களது வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு ஏ இ டியு சி
தரைக்கடை மற்றும் சிறு கடை வியாபாரிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சிவா தலைமை தாங்கினார்.
ஏ ஐ டி யூ சி பொதுச் செயலாளர் கவுன்சிலர் சுரேஷ் தரைக்கடை சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்சார்தீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர் .
இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கு மேற்பட்ட தரைக்கடை சிறுகடை வியாபாரிகள் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில், சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரப் பாதுகாப்புச் சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும்.
நீதிமன்றத் தீர்ப்பின்படி இச்சட்டத்தை அமல்படுத்தாத உள்ளாட்சி ஆணையர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல், உள்ளாட்சி, நெடுஞ்சாலை மற்றும் வனத்துறை அதிகாரிகள் வியாபாரிகளை அப்புறப்படுத்தும் சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.
உடனடியாகக் கணக்கெடுப்பு நடத்தி, அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் அடையாள அட்டை மற்றும் வியாபாரச் சான்று வழங்க வேண்டும்.
என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டக் களத்தில் வியாபாரிகள் முழக்கங்களை எழுப்பினர்.

