Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வெற்றிக்களிப்பில் தஞ்சை தொகுதி தவெக எம்எல்ஏ விஜய் சரவணன், பொது இடத்தில் மது அருந்தி, போதையில் பீர் பாட்டிலுடன் குத்தாட்டம்

0

'- Advertisement -

தஞ்சை தொகுதியில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் எம்.எல்.ஏ. விஜய் சரவணன், குடித்துவிட்டு போதையில் நண்பர்களுடன் ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .

Ad banner

பாட்டிலுடன் பொது இடத்தில் குடித்தும், போதையில் குத்தாட்டம் போடும் தஞ்சை தவெக எம்.எல்.ஏ விஜய் சரவணன். மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு பொதுவெளியில் இத்தகைய அநாகரீக செயலில்

தஞ்சாவூர் தொகுதியைச் சேர்ந்த தவெக எம்எல்ஏ விஜய் சரவணன், கையில் மதுபாட்டிலுடன் நண்பர்களுடன் சாலையோரத்தில் குத்தாட்டம் ஆடும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், குடித்துவிட்டு போதையில் நண்பர்களுடன் ஆட்டம் போட்டுகிறார். மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு பொதுவெளியில் இத்தகைய அநாகரீக செயலில் ஈடுபட்டிருக்கும் அவருக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

 

விஜய் சரவணன் பொதுவெளியில் மது அருந்தியது குறித்து, வெளியான தகவல்களின்படி, தஞ்சை தொகுதி தவெக எம்எல்ஏ விஜய் சரவணன், பொது இடத்தில் மது அருந்தி, போதையில் ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வெளியானதை அடுத்து, நெட்டிசன்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தேர்தலில் வெற்றி பெற்ற குஷியில் நண்பர்களுடன் சேர்ந்து அவர் இவ்வாறு பொது இடத்தில் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது . விஜய் சரவணன் கையில் மது பாட்டிலுடன் நடனமாடும் வீடியோ சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இது 10 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு தனிப்பட்ட நிகழ்வு என விளக்கம் அளித்துள்ளார் விஜய் சரவணன்.

( இந்த வீடியோ பதிவு லிங்க்

.#tvkfailstn pic.twitter.com/Jb0l8WjfHk)

ஏற்கனவே மோசடி புகாரில் திருச்சி முசிறி தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏ விக்னேஸ்வரன் சிக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.