எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த பல திட்டங்களை எடுத்து கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் குமார்
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தன்னை வேட்பாளராக தலைமை அறிவித்த நாள் முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் இன்று பொன்மலை பகுதிக்கு உட்பட 35,வது வட்டத்துக்கு உட்பட்ட காந்தி தெரு, பாரி தெரு’ சத்தியமூர்த்தி தெரு, கண்ணகி தெரு, நாவலர் தெரு,திரு வி கா தெரு, கலைவாணர் தெரு, வள்ளுவர் தெரு, வ உ சி தெரு, அண்ணா தெரு, காமராஜர் தெரு, கம்பர் தெரு, பாரதி தெரு, ஆனந்த பகவான் தெரு, ஐயர் முதல் காலனி, கோவலன் தெரு, காந்தி தெரு, சங்கிலாண்டபுரம் நால்ரோடு, சங்கிலினண்டபுரம் ரோடு’ மணல் வாரித துறை ரோடு , திருவிக தெரு ,மறைமலை அடிகள் தெரு, இளங்கோவன், தெரு, கோவிந்த கோனார் தெரு,’ பாரதியார் பத்தாவது மெயின் ரோடு, அண்ணாநகர், அண்ணா நகர் புறவழி சாலை, பாரதியார் 1 தெரு முதல் பத்தாவது வரை வள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் திருவம்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் குமார் நடந்து சென்று ஒவ்வொரு மக்களையும் சந்தித்து அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.அவர் செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் மலர் தூவி வரவேற்று பெரும் ஆதரவு தெரிவித்தனர்.
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இல்லத்தரசிகளுக்கு ரூபாய் 10,000 வழங்கப்படும் ,
தகுதி வாய்ந்த இல்லத்தரசிகள் என பார்க்காமல் அனைவருக்கும் மாதம் ரூபாய் 2000 வழங்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம் உள்ளிட்ட பல திட்டங்களை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளதை பெண்களிடையே எடுத்துக் கூறி வாக்குகள் சேகரித்தார்.

பிரச்சாரத்தின் போது பகுதி செயலாளர் பாலசுப்பிரமணியன்,பொதுக்குழு உறுப்பினர் சாந்தி கூட்டணி கட்சிகளை சேர்ந்த பாரதிய ஜனதா, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ். பாமக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர் .

