Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

செல்லும் இடமெல்லாம் உங்களுக்குத்தான் வாக்களிப்போம் என பொதுமக்கள் உறுதி.திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் குமாருக்கு உற்சாக வரவேற்பு

0

'- Advertisement -

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி அதிமுக வேட்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் திருவெறும்பூர் தொகுதி முழுவதும் தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

Ad banner

இந்த நிலையில் இன்று பாப்பாக்குறிச்சி பழைய தெரு , மாரியம்மன் கோவில் தெரு , நெய்குளம் , தாமரை வழி தெரு, கீதாபுரம், பெரியார் நகர், பிரியா நகர், பாரதிதாசன் நகர், பாத்திமா புரம், சோழ நகர், சரஸ்வதி நகர், எல்லைக்குடி,கணேஷ் நகர், ராஜப்பா நகர், கைலாஷ் நகர், அண்ணா சாலை. வின் நகர், காந்தி சாலை, பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று அதிமுக சார்பில் போட்டியிடும் தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்குகள் சேகரித்தார்.

ப குமார் செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் மழை தூவி ஆரத்தி எடுத்து தங்கள் வீட்டுக்கு பிள்ளையாக சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அப்போது பொது மக்களிடம் பேசிய குமார் கூறியதாவது :-

இந்தப் பகுதியில் ஐந்தாண்டு காலமாக எம்எல்ஏவாகவும் 5 ஆண்டு காலம் அமைச்சராகவும் செயல்படாமல் இருந்த திமுக உறுப்பினர் அளித்த வாக்குறுதிகளையும் அவர் செயல்படாத நிலையில் உள்ளதையும் எடுத்துக் கூறினார்.

மேலும் தற்போது தான் திருவெறும்பூர் தொகுதிக்கு சொந்த செலவில் செய்ய உள்ள திட்டங்களையும் வருங்கால தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ள மக்கள் நல திட்டங்கள் குறித்த வாக்குறுதிகளையும் எடுத்துரைத்தார்.

செல்லும் இடமெல்லாம் நாங்கள் இரட்டை இலைக்கு தான் வாக்களிப்போம் என பொதுமக்கள் உறுதி அளித்து வருகின்றனர்.

 

பிரச்சாரத்தின் போது பகுதி செயலாளர்கள் முருகானந்தம், பாஸ்கர், வட்டச் செயலாளர்கள் ஜெயராஜ், ,மணி,மாவட்ட அம்மா பெயரவை செயலாளர் சூரியூர் ராஜ மணிகண்டன்,அண்ணா தொழில் சங்கம் கார்த்தி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.மேலும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள்,தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட பல திரளாக கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.