பாலக்கரையில்

மதுவுக்கு அடிமையான வாலிபர் திடீர் சாவு .
திருச்சி சங்கிலியாண்ட புரம் தெரசம்மாள் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன் இவரது மகன் ஆனந்தகுமார் (வயது 25 ) பெயிண்டர் திருமணமாகாத இந்த வாலிபருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது , ஒரு கட்டத்தில் மதுவுக்கு அடிமையான இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் மது அருந்தி வந்து உள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று மது போதையில் முதலியார் சத்திரம் அங்கன்வாடி பகுதியில் மயங்கி கிடந்து உள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். இது குறித்து அவரது தாயார் மல்லிகா கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

