திருச்சி உறையூரில் செல்போனில் கடலை போடுவதை கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவி மாயம்

திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் சுபா ( வயது 14). பெயர் மாற்றப்பட்டுள்ளது இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். சுபாவின் தந்தை கருத்து வேறுபாடு காரணமாக தனியாக பிரிந்து சென்று விட்டார்.
இவரின் தாயார் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இதனால் கலா அங்குள்ள பாட்டியின் வீட்டில் தங்கி இருந்து பள்ளிக்கு சென்று வந்து உள்ளார்.
சமீபகாலமாக அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அவரது சித்தியும் பாட்டியும் அவரை கண்டித்து உள்ளனர்.
இதனால் வெறுப்பு அடைந்த சுபா வீட்டிலிருந்து வெளியே சென்றார் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடியும் அவரை இங்கு காணவில்லை . இது குறித்து அவரது சித்தி உறையூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் உறையூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

