Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் மகேஷ்க்கு ஆதரவாக அமைச்சர் நேரு பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார்.

0

'- Advertisement -

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை ஆதரித்து, இன்று திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார்.

Ad banner
TVK ad

அதனைத் தொடர்ந்து, திருச்சி மாநகராட்சி, பொன்மலைப் பகுதிக்குட்பட்ட வார்டு எண் 46-ல் தீவிர வாக்குச் சேகரிப்பு நடைபெற்றது. இப்பிரச்சாரத்தில் பொன்மலைப்பட்டி ரைஸ் மில், கொட்டப்பட்டு, முறைசிட்டி விஸ்தரிப்பு பகுதி (Morais City), வெங்கடேஸ்வரா நகர், எம்.ஜி.ஆர் நகர், பொன்மலைப்பட்டி, உடையார் தெரு மற்றும் மலையடிவாரம் ஆகிய பகுதிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் வாக்குக் கேட்டார்.

இந்நிகழ்வின் மாநகர செயலாளர் மு மதிவாணன், பகுதி செயலாளர் கொட்டப்பட்டு தர்மராஜ், மாமன்ற உறுப்பினர் ரமேஷ், வட்ட செயலாளர்கள் முருகன், பரமசிவம், உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் முக்கியப் பொறுப்பாளர்கள் உடனிருந்து ஆதரவு திரட்டினர். வாக்கு சேகரித்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தினர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.