ஒரே திட்டத்தில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ரூ.500 கோடி ஊழல். திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் குமார் பிரச்சாரத்தில் பேசிய முழு விபரம் .
நேற்று மாலை அரியமங்கலம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் ப.குமார் பொதுமக்கள் இடையே திமுக அரசின் அவல நிலையினையும் அமைச்சர் மகேஷ் பொய்யா மொழியின் ஊழல்களையும் தோல் உரித்து பேசினார் : அவர் பேச்சின் முழு விவரம் வருமாறு –

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய தெய்வீக ஆசியோடும் இன்றைய தினம் இயக்கத்தை வழிநடத்திக் கொண்டிருக்கின்ற அதிமுக பொதுச்செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆதரவோடு இயங்குகின்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்,நிர்வாகி சசி, பாரதிய ஜனதா கட்சியின் சரவணன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் குணா, இந்த நிகழ்வை இங்கே ஏற்பாடு செய்து நடத்திக் கொண்டிருக்கின்ற பகுதி கழக செயலாளர் முருகானந்தம் இந்த நல்ல வரவேற்பு வழங்கிய இந்த பகுதியின் மாமன்ற உறுப்பினர் அனுசியா ரவிசங்கர், வட்ட ரவிசங்கர் அதற்கு மேலாக இந்த நிகழ்வுகளை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட கழக பகுதி கழக பேரூர் கழக செயலாளர் பொதுமக்களே நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய மாலை வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு வரும் 23ஆம் தேதி நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தொகுதியில் திருவம்பூர் வேட்பாளராக போட்டியிடுகின்ற எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு சேகரிக்கின்ற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக 2021 திராவிட முன்னேற்றக் கழக தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் சுமார் 505 வாக்குறுதிகள் வழங்கினார்கள் அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக தேர்தல் வாக்குறுதி வழங்கினார்கள். அதன் அடிப்படையில் பார்த்தால் இந்த திருச்சி மாவட்டத்திற்கு சேவை சாலை அமைப்பேன் என்று பழைய பால் பண்ணை முதல் துவாக்குடி வரை போக்குவரத்து நெரிசலை தடுப்போம் தீர்வு காண்போம் என இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் மகேஷ் வாக்குறுதி கொடுத்தார். ஆனால் ஐந்து ஆண்டுகள் ஆகியும் இதில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்பது உங்களுக்கு தெரியும்ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன்பு கால் பண்ணை சர்வீஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது ஒரு அமைச்சர் அவரே இறங்கி போக்குவரத்தை சரி செய்தார். ஒரு போக்குவரத்து காவலர் செய்ய வேண்டிய வேலையை அமைச்சராக இருந்து செய்து கொண்டிருக்கிறார்.அதேபோன்று இங்கிருக்கும் அரியமங்கலம் குப்பை கிடங்கு இந்த குப்பை கிடங்கு குப்பையை அதிமுக ஆட்சியில் படிப்படியாக அகற்றப்பட்டது முழுவதுமாக அகற்றப்பட்ட பின்பு அங்கு வணிக வளாகம் கட்டபடும் என்று அதிமுக அரசு வாக்குறுதி கொடுத்திருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தது இங்கே மேலும் மேலும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு சுமார் ஏழு கிலோமீட்டர் சுற்றளவு இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் எல்லாம் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதிலேயும் கவனம் செலுத்தாமல் இந்த தொகுதி மீது எந்த அக்கறையும் இல்லாமல் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி இங்கே பத்தாண்டு காலமாக சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
5 ஆண்டுகள் மந்திரியாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
நான் முதன் முதலில் தேர்தல் பிரச்சார பயணத்தில் நான் அவர் மீது ஒரு குற்றச்சாட்டு சொன்னேன் கருணாநிதியை போல் விஞ்ஞானபூர்வமாக ஊழல் செய்வதில் இன்றைக்கு முதன்மையான இடத்தை பிடித்திருக்கிறார் மகேஷ் பொய்யாமொழி என்று அந்த குற்றச்சாட்டை கூறினேன்
இதுவரை அவர் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை இன்னன்றைக்கு வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு இது சம்பந்தமாக பேசவில்லை தேர்தல் பிரச்சாரத்திலும் இது சம்பந்தமாக எந்த ஒரு பதிலும் சொல்லவில்லை.
அவர் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஸ்மார்ட் கிளாஸ் ஒப்பந்தத்தில் கேரளாவை சேர்ந்த டெல்டா நிறுவனம் (டெல்டா ஐடி நெட்வொர்க்) ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் எடுத்துள்ளது அந்த ஒப்பந்தத்தில் மூன்று சதவீதம் சேர்த்து வைத்து இவருடைய மகேஷ் பொய்யா மொழியின் பினாமி கம்பெனி தமிழ்நாட்டில் செயல்படுத்தி உள்ளது. அதன் மூலமாக சுமார் (ஒரு திட்டத்தில் மட்டுமே) ரூபாய் 500 கோடி ஊழல் செய்து உள்ளார்.மறுக்க முடியுமா மறுத்தால் உங்களது பினாமி கம்பெனியின் பெயரையும் வெளியிட தயாராக உள்ளேன்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி அமையும் அப்போது இந்த ஊழல் மட்டுமல்ல நீங்கள் செய்த அனைத்து ஊழல்களையும் உலகத்திற்கு கொண்டு வருவோம்,அவரைப் பொறுத்தவரை ஒரு நடிப்பு அரக்கனாக தான் உள்ளார் நடிப்பதிலேயே வல்லவராக உள்ளார்.
இதுவரை தேர்தலுக்கு முன்பாக விலை உயர்ந்த காரில் வருவார், பொதுமக்களை சந்திக்க மாட்டார்,இப்பொழுது டொயோட்டா காரில் உங்களில் ஒருவன் என்று கிளம்பி வந்துள்ளார். அவருக்கு நீங்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் இந்த தொகுதியின் பெயரை சொல்லி அவரை வளப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
எனவே இந்த தொகுதிக்கு உழைக்கக்கூடிய இந்த தொகுதியின் வளர்ச்சிக்கு பாடுபடகூடிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி வேட்பாளராக போட்டியிடுகின்ற எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். நான் உங்களுக்கு பணியாற்ற காத்திருக்கிறேன். நன்றி வணக்கம் என பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார் அதிமுக திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் குமார்.

