Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சூரியூர் மற்றும் காட்டூரில் மட்டுமே ஐல்லிக்கட்டை நடத்திய ஆஸ்கர் நாயகள் போல் இல்லாமல் அனைத்து கிராமங்களிலும் எனது சொந்த செலவில் ஐல்லிக்கட்டை நடத்துவேன். திருவெறும்பூர் அதிமுக வேட்பாளர் குமார் வாக்குறுதி .

0

'- Advertisement -

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமார் இன்று வெள்ளிக்கிழமை மாலையில் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பர்மா காலனி,அய்யனார் நகர் , நடுத்தெரு ,ராமலிங்க நகர் ,மாருதி நகர் ,அயன்புத்தூர்,நெசவாளர் காலனி, பத்மா காலனி கணபதி நகர் ,வீரம்மாள் நகர், குண்டூர் அய்யனார் நகர் பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

 

Ad banner

வீடு வீடாக சென்று அதிமுக அரசின் சாதனைகளையும்,தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அளித்து நிறைவேற்றாத வாக்குறுதிகளையும் எடுத்துக் கூறினார்.

 

மேலும் பொதுமக்களிடையே பேசும்போது தான் வெற்றி பெற்றவுடன் பாரம்பரிய முறைப்படி அனைத்து ஊர்களிலும் நடக்கும் ஐல்லிக்கட்டை எனது செலவில் நடத்திக்கொடுப்பேன் என பொய் வாக்குறுதி கொடுத்துவிட்டு சூரியூர் மற்றும் காட்டூரில் மட்டுமே ஐல்லிக்கட்டை நடத்திய ஆஸ்கர் நாயகள் போல் இல்லாமல் அனைத்து கிராமங்களிலும் ஐல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுப்பேன். சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள், ஐல்லிக்கட்டு காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் கொண்ட “ஐல்லிக்கட்டு குழு” அமைக்கப்படும்.

மேலும் ஐல்லிக்கட்டு நடத்துவதற்கான உள்கட்டமைப்புக்கு தேவையான (தடுப்பு வேலி (Barry Guard), வாடிவாசல், மேடை, பார்வையாளர்கள் மாடம், பத்திரிக்கையாளர் மாடம், புறவாடிவாசல், காளைகள் சேகரிக்கும் இடம்) அனைத்து பொருட்களும் எனது சொந்த செலவில் வாங்கப்பட்டு, ஜல்லிக்கட்டு குழுவிடம் ஒப்படைக்கப்படும்.

தொகுதி முழுவதும் நிரந்தர பட்டா பெறாமல் பல்வேறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதை நிவர்த்தி செய்கின்ற வகையில் ஆட்சி அமைந்த 100 நாட்களுக்குள் ஒரு சிறப்பு அலுவலர் குழு அமைத்து, தீர்வு காணப்படும் என் வாக்குறுதி அளித்தார்.

திருவெறும்பு வேட்பாளர் ப.குமார் பிரச்சாரத்தின் போது அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.