ஒரே நாளில் மணப்பாறை,லால்குடி தொகுதிகளில் மாவட்ட செயலாளராக நிகழ்ச்சிகளிலும்,திருவெறும்பூர் தொகுதியில் வேட்பாளராக பிரச்சாரமும் என ஓய்வின்றி உழைத்து வரும் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் குமார் .
திருச்சி திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளரும் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமார் தற்போது தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளார்.

தெற்கு மாவட்ட செயலாளராக இருப்பதால் மணப்பாறை தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டம் என அவற்றில் கலந்து கொண்ட பின் லால்குடி சென்று அங்கு வேட்பாளர் அறிமுக கூட்டம் போன்ற நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளராக பங்கு எடுத்த பின் நேரடியாக திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்கு சென்று இல்லம்தோறும் பொது மக்களை சந்தித்து அதிமுக ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளை எடுத்துக் கூறி,மேலும் தற்போது அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்து கூறி வாக்குகளை சேகரித்து வருகிறார்
மேலும் தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி இந்த திருவெறும்பூர் தொகுதிக்கு என்ன திட்டங்களை கொண்டு வந்தார்,மக்கள் குறைகளை தீர்த்தாரா ?சர்வீஸ் ரோடு அமைத்து தந்தாரா?கடந்த தேர்தலில் ஒரு அவர் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றி தந்தாரா? இந்த வாக்குறுதியும் நிறைவேற்றாத திமுக வேட்பாளர் உங்கள் ஓட்டு? என மக்களிடம் எடுத்துக் கூறி வாக்குகளை சேகரித்து வருகிறார்.
மாவட்ட செயலாளராக இரண்டு தொகுதிக்கு சென்று தனது தொகுதியிலும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ப.குமார் ஓய்வின்றி உழைத்து வருகிறார் எனவே இந்த முறை அதிமுகவுக்கு தான் வாக்களிப்போம் என திருவெறும்பூர் தொகுதி பொதுமக்கள் கூறியுள்ளனர்.

