Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பொதுமக்கள் நெருங்க முடியாமல் விவிஐபி போன்று பவுன்சர்கள் பாதுகாப்புடன் பிரச்சாரம் செய்யும் லால்குடி அதிமுக வேட்பாளர் ரோஸுக்கு வாக்களிக்க மாட்டோம் .

0

'- Advertisement -

திருச்சி லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் கடந்த மாதம் அதிமுகவில் இணைந்த மார்ட்டின் லாட்டரி உரிமையாளர் லீமா ரோஸ் மார்ட்டின்.

Ad banner

தலைமைக்கு பணத்தை (தேர்தல் நிதி) கொடுத்து லாட்டரி விற்று வந்த பணத்தை மற்றும் சொத்துக்களை பாதுகாக்க ஏதோ ஒரு கட்சியில் (மகன், மருமகன் உள்ளிட்டார்) இணைந்து தற்போது வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளனர்.

லால்குடி தொகுதியில் தொடர்ந்து நான்கு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர் சௌந்தரபாண்டியன் இவருக்கு இந்த தொகுதியில் தற்போது போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது .எனவே இந்த தொகுதியில் அதிமுக சார்பில் யார் போட்டியிட்டாலும் வெற்றி பெறலாம் என்ற நிலையில் அதிமுகவில் இணைந்து ஒரு மாதம் கூட ஆகாத ஒருவரை லால்குடி தொகுதியில் வேட்பாளர் என அறிவித்தது அந்த தொகுதியில் பல ஆண்டுகளாக கட்சிக்காக பல ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களில் கலந்து கொண்டு உழைத்து வந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

தற்போது பணத்தை செலவு செய்து நிர்வாகிகளை சமாதானம் செய்து,தொண்டர்களை சந்தித்து வெற்றி பெறலாம் என நினைத்துள்ளார் லீமா ரோஸ்.

இந்த நிலையில் லால்குடி சென்று பொதுமக்களிடம் நாம் விசாரித்த போது அதிமுகவுக்கு உள்ள ஓட்டு அப்படியே தான் உள்ளது .நாங்கள் சௌந்தர பாண்டியனின் தீவிர விசுவாசிகள் அவருக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது,எனவே இந்த முறை திமுகவுக்கு எங்கள் ஓட்டு கிடையாது,நாங்கள் அதிமுகவுக்கு வாக்கு அளிக்கலாம் என நினைத்து இருந்தோம் ஆனால் அதிமுக வேட்பாளர் மக்களிடம் நெருங்கி பழகாமல் பவுன்சர்கள் பாதுகாப்புடன் (இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூட எந்த காவல்துறை மற்றும் பவுன்சர்கள் பாதுகாப்பு இல்லாமல் மக்களுடன் மக்களாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது) வருவது எங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது .இப்போதே மக்களுடன் நெருங்கி பழகாதவர் எப்படி வெற்றி பெற்ற பின் மக்களே சந்தித்து குறைகளை கேட்பார்,நாங்கள் அவரை சந்தித்து எப்படி குறைகளை கூறுவது.அதிமுக தொண்டர்கள் கூட இவருக்கு வாக்களிக்க மாட்டார்கள்.எனவே இதற்கு அடுத்த உள்ள நல்ல வேட்பாளருக்கு வாக்களிக்க உள்ளோம்.

 

லால்குடி தொகுதியில் அதிமுக எளிதாக வெற்றி பெற வேண்டிய நிலையில் பணத்திமிரில் மக்களோடு மக்களாகச் சென்று வாக்கு சேகரிக்காத அதிமுக வேட்பாளருக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள் .எனவே இந்த லால்குடி தொகுதியில் அதிமுகவின் வெற்றி பறிபோகிறது …….

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.