10 ஆண்டுகளில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாதவர்அன்பில் மகேஷ் பொய்யாமொழி.திருவெறும்பூர் தொகுதியில் வீடு வீடாக சென்று எடுத்துக் கூறிய அ.தி.மு.க. வேட்பாளர் குமார்.
திருவெறும்பூர் தொகுதியில்

10 ஆண்டுகளில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாதவர்அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அ.தி.மு.க. வேட்பாளர் ப. குமார் ஆவேசம்.
திருவெறும்பூர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் ப.குமார் தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இன்று பனையகுறிச்சி, சர்க்கார் பாளையம், குவளக்குடி, கீழக்களமலை, மேல களமலை, ஒட்டக்குடி, புத்தாபுரம், காந்திபுரம், ஆகிய பகுதிகளில்
வீடு வீடாக சென்று பொதுமக்காய் சந்தித்து துண்டு பிரசுரங்களை விநியோகித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்து பொதுமக்கள் மத்தியில் ப.குமார் பேசியதாவது;-
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த தேர்தலில் 505 வாக்குறுதிகளை வழங்கினார், அதில் 345 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனை பல மேடைகளில் நமது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் எடுத்து பேசி இருக்கிறார்கள். மேலும் 165 வாக்குறுதிகளை பகுதியாக தான் நிறைவேற்றி இருக்கிறார்கள். தன்னால் நிறைவேற்ற முடியாத மத்திய அரசு திட்டங்களை வாக்குறுதிகளாக அளித்தார். நீட் தேர்வை ரத்து செய்வேன் என்றார் அதை ரத்து செய்ய முடியவில்லை. ஏனென்றால் அதற்கான அதிகாரம் அவரிடம் இல்லை. ஆனால் நீட் தேர்வை மறு பரிசீலனை செய்யும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது எடப்பாடியார் முதலமைச்சராக இருந்திருந்தால் அதனை நிறைவேற்றி இருப்பார்.

ப.குமார் இல்லண்டோரும் வழங்கி வரும் நோட்டீஸ் .
அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மகளிர் மாதந்தோறும் ரூ.1000 தருவதாக வாக்குறுதி அளித்தார்கள் ஆனால் ஆட்சிக்கு வந்து 28 மாதம் கழித்து நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியதால் 28 மாதம் கழித்து அந்தத் திட்டத்தை நிறைவேற்றினார்கள். அதுவும் தகுதியான நபர்கள் என ஏராளமான இல்லத்தரசிகளை கழித்து விட்டார்கள்.
தற்போது சட்டமன்றத் தேர்தல் நெருங்கியதால் ரூ.5000 வழங்கியதை தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் மக்கள் நீங்கள் கொடுக்க வேண்டிய பாக்கி தொகை 23,000 கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூர் தொகுதியில் காலடி எடுத்து வைத்தால் அவசர அவசரமாக வெளியேறி விடுவார். காரணம் கடந்த பத்தாண்டுகளில் இந்த தொகுதிக்கு நிறைய வாக்குறுதிகள் அளித்தார், ஆனால் எதையும் அவர் நிறைவேற்றவில்லை
எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் நாங்கள் பொது பிரச்சினையை கையில் எடுத்து நிறைவேற்றி தந்துள்ளோம். துவாக்குடியில் அடுத்தடுத்து இரண்டு சுங்கச்சாவடிகள் அமைக்க முயன்ற போது மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சருக்கு விதிகளை சுட்டி காட்டி நான் கடிதம் எழுதியதன் விளைவாக அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது.
இந்த தொகுதியின் எம்எல்ஏ மகேஷ் பொய்யாமொழியுடன் நான் மட்டுமல்ல அதிமுக சாதாரண தொண்டனும் விவாதிக்க தயாராக உள்ளனர். வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கு இந்த தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்க

பிரச்சாரத்தின் போது அதிமுக திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் SKD கார்த்தி, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ராஜ மணிகண்டன், தெற்கு ஒன்றிய செயலாளர் ராவணன்,கணேசன், பேரூர் செயலாளர் முத்துக்குமார், பெல் கார்த்தி, பொதுக்குழு உறுப்பினர் சாந்தி, கணபதி, பகுதி செயலாளர் பாஸ்கர், அரியமங்கலம் பகுதி செயலாளர் தண்டபாணி, பொன்மலை பகுதி செயலாளர் பாலசுப்ரமணியன், கூட்டணி கட்சி சார்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ஒண்டி முத்து தமிழ் மாநில காங்கிரஸ் குணா, மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த பலரும் உடன் இருந்தனர்.

