Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மண்ணச்சநல்லூர் தொகுதியில் ஈஸியா ஜெயிப்போம். ஆர்.வி.பரதன் பேட்டி.

0

'- Advertisement -

அதிமுக தலைமயைிலான என்டிஏ கூட்டணியில் புதிதாக சிங்க தமிழர் முன்னேற்ற கழகம் இணைந்துள்ளது. இந்த கட்சிக்கு திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டசபை தொகுதியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒதுக்கீடு செய்துள்ளார்.

 

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 27 தொகுதிகளுக்கும், பாமகவிற்கு 18 தொகுதிகளும், அமமுகவிற்கு 11, தமாகாவிற்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதவிர பிற கூட்டணி கட்சிகளுக்கு ஒன்று, இரண்டு சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

 

கூட்டணி கட்சிகளுக்கு வழங்கியது போக மீதமுள்ள 169 தொகுதிகளில் அதிமுக போட்டியிட முடிவெடுத்துள்ளது. அதன்படி 150 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

சிதமுக-விற்கு மண்ணச்சநல்லூர்

 

இந்நிலையில் தான் அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதிய கட்சியாக சிங்க தமிழர் முன்னேற்ற கழகம் சேர்ந்துள்ளது. அந்த கட்சியின் தலைவர் ஆர்.வி. பரதன், எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தொகுதி பங்கீடு பற்றி பேசினார். இதையடுத்து சிங்க தமிழர் முன்னேற்ற கழகத்துக்கு திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் சட்டசபை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

75,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி :

 

இதுபற்றி சிங்க தமிழர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஆர்.வி. பரதன் கூறியதாவது:- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எங்களுக்கு மண்ணச்சநல்லூர் சட்டசபை தொகுதியை ஒதுக்கீடு செய்துள்ளார். தலைவர் என்ற முறையில் அவருடன் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டேன்.

 

வரும், சட்டசபை தேர்தலில் மத்திய மண்டலத்தில் எங்களுடன் பயணிக்க கூடிய அனைத்து கூட்டணி கட்சிகளையும் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற அயராது பாடுபடுவோம். மண்ணச்சநல்லூர் தொகுதியில் நாங்கள் 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.

 

இரட்டை இலையில் போட்டி :

 

மண்ணச்சநல்லூரில் நாங்கள் ஈஸியாக ஜெயிப்போம். ஏனென்றால் அங்கு நாங்கள் வலுவான சக்தியாக இருக்கிறோம். எங்களின் சிங்க தமிழர் முன்னேற்ற கழகத்தில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் உள்ளனர்” என்றார். சிங்க தமிழர் முன்னேற்ற கழகத்துக்கு தனி சின்னம் கிடையாது. இதனால் அந்த கட்சி அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளது.

 

தொகுதியின் பின்னணி:

 

இந்த மண்ணச்சநல்லூர் தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவாக சீ. கதிரவன் உள்ளார். இவர் திமுகவை சேர்ந்தவர். கடந்த 2021 தேர்தலில் கதிரவன் மொத்தம் 1 லட்சத்து 16 ஆயிரத்து 334 ஓட்டுகளை பெற்றார். இவரை எதிர்த்து களமிறங்கிய அதிமுகவின் பரஞ்சோதி 56,716 ஓட்டுகளை பெற்றார். இதனால் திமுக வேட்பாளர் கதிரவன் 59,618 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.இந்த முறை தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நடைபெற்ற கிட்னி திருட்டு செய்தி மற்றும் கடந்த ஐந்து வருடங்களாக தொகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை என கதிரவன் மீது அத்தொகுதி பொதுமக்கள் கடும் அதற்கு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த முறை கதிரவன் மண்ணச்சநல்லூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டால் பரதன் எளிதாக வெற்றி பெறுவார் என கூறப்படுகிறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.