Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் முடிவுற்ற பள்ளி கட்டிடங்களை பள்ளி குழந்தைகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் முனைவர் மகேஷ் பொய்யாமொழி.

0

'- Advertisement -

திருச்சி திருவறும்பூர் தொகுதியில் முடிவுற்ற பள்ளி கட்டிடங்களை பள்ளி குழந்தைகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் முனைவர் மகேஷ் பொய்யாமொழி.

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூரியூர் ஊராட்சி சின்ன சூரியூர் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ரூ.52 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டிலான வகுப்பறை கட்டிடங்களை மாணவர்களின் பயன்பாட்டிற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

மேலும் இதே போல் கீழ முல்லக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு நடுநிலைப் பள்ளியில் ரூ.52 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டிலான கட்டி முடிக்கப்பட்ட புதிய வகுப்பறைகளை பள்ளிக் குழந்தைகளின் பயன்பாட்டிற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்வில் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன் திருவெறும்பூர் தாசில்தார் கார்த்திகேயன் உட்பட மாவட்ட கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.