40 நாட்களுக்கு தூக்கம் இல்லாமல் உழைக்க வேண்டும்.திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் நேரு.
200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் : எத்தனை பேருடன் கூட்டணி வைத்தாலும் திமுகவை வீழ்த்த முடியாது.
திருச்சி ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் கே என். நேரு பேச்சு
கேஸ் தட்டுப்பாட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சி கன்ட்ரோல்மென்ட் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் திமுக சார்பில் இன்று திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு கலந்து கொண்டு பேசியதாவது:-
வருகின்ற தேர்தலில் மீண்டும் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவி ஏற்க அனைவரும் உழைக்க வேண்டும். நான்காண்டுகள் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி பாஜக கூட்டணியில் இருப்பதால் மத்திய அரசிடம் பேசி தமிழகத்திற்கு கேஸ் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுத்தால் என்ன?
ஆனால் மாநில அரசு தொடர்ந்து கேஸ் சிலிண்டர் தட்டுபாட்டை போக்கவும், மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசிடம் நமது முதல்வர் தொடர்ந்து பேசிக்கொண்டு தான் இருக்கிறார்.
மக்களின் நலனில் அக்கறை காண்பிப்பது நமது முதல்வர் மட்டும் தான். ஆகையால் வருகின்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக- கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.
எத்தனை பேருடன் கூட்டணி வைத்தாலும் திமுகவை வீழ்த்த முடியாது. இந்நிலையில் யார் எதை சொன்னாலும் அவற்றை புறம் தள்ளிவிட்டு நமது வெற்றி என்ற இலக்கை நோக்கி அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
குறிப்பாக வருகின்ற தேர்தலில் திருச்சியில் கூட்டணி கட்சிகளுக்கு எந்த தொகுதியை ஒதுக்கினாலும் திமுக நிர்வாகிகள் உண்மையாக உழைத்து வெற்றி பெற வைப்போம். மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் வஞ்சித்து வருகிறது.ஆனால் தமிழக முதலமைச்சர் நிதி சுமையை சமாளித்து பல்வேறு திட்டங்களை இந்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தி உள்ளார் என்று சொன்னால் அது மிகையாகாது.
இன்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. ஆகையால் இன்றிலிருந்து 40 நாட்களுக்கு தூக்கம் இல்லாமல் உழைக்க வேண்டும். தமிழக முதல்வர் செய்த சாதனையை வீடு வீடாக சென்று அனைவரும் எடுத்து கூற வேண்டும். தேர்தல் நேரத்தில் அனைவரும் வாக்குறுதிகளை தொடர்ந்து அறிவித்து வருகிறார்கள். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி. பழனிச்சாமி ரூபாய் 10,000 தருகிறேன்,உள்ளிட்ட புதிய அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். ஆனால் திமுக ஆட்சியில் மகளிர்க்கு ரூபாய் 1000 தரப்படும் என்று அறிவித்தபோது எப்படி சாத்தியமாகும் என்று கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் இவர் அறிவித்த வாக்குறுதிகளை எப்படி சாத்தியப்படுத்துவார். ஆகையால் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் புதிது புதிதாக அறிவிப்புகளை வெளியிடுவார்கள். ஆனால் நமது முதல்வர் தேர்தல் அறிக்கையில் சொன்னதையும், சொல்லாததையும் செய்து காட்டியவர். 
நாம் எதையும் கண்டு கொள்ளாமல் கூட்டணி கட்சி தோழருடன் ஒன்றிணைந்து வருகின்ற தேர்தலை எதிர்கொண்டு மீண்டும் திமுக ஆட்சி அமைப்பதற்கும், தமிழ்நாடு முதல்வராக மு. க. ஸ்டாலின் அவர்களை பதவி ஏற்பதற்கு உழைக்க வேண்டும்.
வருகின்ற தேர்தலில் திமுக வெற்றி பெறுவது நிச்சயம். இவ்வாறு அமைச்சர் கே.என். நேரு பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணை செயலாளர் கவுன்சிலர் முத்து செல்வம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி,மருத்துவ அணியை சேர்ந்த டாக்டர் கண்ணன்,சங்கர், மக்கள் நீதி மய்யத்தின் திருச்சி மேற்கு மாவட்ட செயலாளர் sps. G.சதீஸ்குமார் தலைமையில் மய்ய பொறுப்பாளர்கள் நகரச் செயலாளர்கள் pkசீனிஹாசன், விசுவாசம் வின்சென்ட், முஷரப்,
வார்டு செயலாளர்கள் சக்திவேல், பாலாஜி,தென்னூர் ரமேஷ், தம்சுதீன், பாதுஷா, பிரபாகரன், கலை,உறுப்பினர்கள் மிளகு பாறை ரமேஷ், உறையூர் சுந்தர்,
கமல் நட்ராஜ்
செல்வராஜ், ஜங்ஷன் கார்த்திக், மற்றும் பலர் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்,

