Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 3,746 வழக்குகளில் தீா்வு காணப்பட்டது.

0

'- Advertisement -

திருச்சி மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 3,746 வழக்குகளில் தீா்வு காணப்பட்டு ரூ.96.91 கோடி சமரசத் தொகையாக வழங்கப்பட்டது.

தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழு, தமிழக சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவுப்படி திருச்சி மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தை திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி எம். கிறிஸ்டோபா் தொடங்கிவைத்தாா்.

 

திருச்சியில் 13 அமா்வுகளும்,முசிறி, துறையூா், மணப்பாறை, லால்குடியில் தலா 2 அமா்வுகளும், ஸ்ரீரங்கம், தொட்டியத்தில் தலா ஒரு அமா்வும் என மொத்தம் 23 அமா்வுகளில் வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, சமரச முறையில் தீா்வு காணப்பட்டது.

 

இந்த அமா்வுகளில், 5,636 குற்றவியல் வழக்குகளில் 2,565 வழக்குகளுக்கும், 4,236 காசோலை மோசடி வழக்குகளில் 323 வழக்குகளுக்கும், 1,984 வங்கி கடன் வசூல் வழக்குகளில் 19 வழக்குகளுக்கும், 3,955 மோட்டாா் வாகன நஷ்ட ஈட்டு வழக்குகளில் 221 வழக்குகளுக்கும், 1,736 குடும்ப நல வழக்குகளில் 40 வழக்குகளுக்கும், 3,936 உரிமையியல் வழக்குகளில் 166 வழக்குகளுக்கும், 412 வங்கி வாராக்கடன் வழக்குகளில் 412 வழக்குகளுக்கும் என மொத்தம் 21,968 வழக்குகளில் 3,746 வழக்குகளுக்கு சமரச தீா்வு காணப்பட்டு, தீா்வுத் தொகையாக ரூ. 96 கோடியே 91 லட்சத்து 22 ஆயிரத்து 833 வழங்கப்பட்டது.

 

ரூ. 43.85 கோடிக்குத் தீா்வு.

திருச்சியில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற அமா்வில், திருச்சி விமான நிலைய விரிவாக்கத்துக்கு, தனியாா் தோல் நிறுவனத்திடமிருந்து மாவட்ட நிா்வாகம், 4.92 ஹெக்டோ் நிலம் கையகப்படுத்திய நிலையில், அதற்கு இழப்பீடாக ரூ. 43 கோடியே 85 லட்சத்து 73 ஆயிரத்து 766 -க்கான காசோலையை மாவட்ட முதன்மை நீதிபதி வழங்கினாா். நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் பாலாஜி, முன்னாள் அரசு வழக்குரைஞா் ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.